»   »  செந்திலிடம் செருப்பை கொடுத்து தன்னை அடிக்கச் சொன்ன விக்னேஷ் சிவன்

செந்திலிடம் செருப்பை கொடுத்து தன்னை அடிக்கச் சொன்ன விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
செந்திலிடம் செருப்பால் அடி வாங்க ஆசைப்பட்ட விக்னேஷ் சிவன்

சென்னை: விக்னேஷ் சிவன் தனது செருப்பை கொடுத்து தன்னை அடிக்குமாறு செந்திலிடம் கூறியதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. ரொம்ப நாள் கழித்து அவர் ரிலாக்ஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து சூர்யா கூறியதாவது,

அனிருத்

அனிருத்

விக்னேஷ் சிவன், அனிருத் கூட்டணி நிச்சயம் ஏதாவது ஸ்பெஷலாக இருக்கும் என்று கார்த்தி உள்பட என் குடும்பத்தார் கூறினார்கள். இருய்யா, இருய்யா கதையை கேட்டுவிட்டு நடிக்கிறேன் என்றேன்.

சீரியஸ்

சீரியஸ்

விக்னேஷ் சிவன் என்னை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். நான் ஒரு லோக்கலான கடைக்கு சென்று டீ குடித்து ரொம்ப நாளாகிவிட்டது. கொஞ்ச காலமாக நான் ரொம்ப சீரியஸான கதாபாத்திரங்களிலேயே நடித்திருக்கிறேன்.

நாடு

நாடு

ஒரு ஸ்டேட்டை இன்னொரு ஸ்டேட்டிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். ஒரு நாட்டை மற்றொரு நாட்டிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறேன். அப்படி எல்லாம் இல்லாமல் இந்த படத்தில் சிம்பிளாக நடித்துள்ளேன்.

மது

மது

புகைப்பிடித்தல், மது அருந்துதல் எச்சரிக்கை இந்த படத்தில் இருக்காது. படத்தில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் காட்சி இல்லாததை பார்த்து சென்சார் போர்டு விக்னேஷ் சிவனை பாராட்டியது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

தான் என்ன செய்கிறோம் என்பதில் செந்தில் தெளிவாக உள்ளார். நீங்க இந்த மாதிரி தான் டயலாக் பேச வேண்டும் என்று விக்னேஷ் சிவன் செந்திலிடம் கூறினார். நீங்க என் கேரக்டரை இப்படி வச்சிருக்கிறீங்க. அப்படி இருக்கும்போது நான் இந்த டயலாக்கை பேசினால் சரியாக வராது என்றார்.

செருப்பு

செருப்பு

செந்திலுக்கு வசனம் மறந்துவிடும் நாம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தவறு. அவர் இன்னும் ஃபார்மில் உள்ளார். விக்னேஷ் சிவன் வந்து தனது செருப்பை கழற்றிக் கொடுத்து இதை வைத்து என்னை அடிங்க சார் என்று செந்திலிடம் கூறினார் என்றார் சூர்யா.

English summary
Suriya said that after seeing Senthil's talent director Vignesh Shivan asked the ace comedian to hit him with his slippers. Thaana Serndha Koottam is hitting the screens tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X