அவரை பார்க்கும் போதே நமக்கு தானா சுறுசுறுப்பு வரும்.. அருள்மொழிவர்மன் யாரை சொல்றார்னு தெரியுதா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷாவுக்கு முக்கியத்துவம்

த்ரிஷாவுக்கு முக்கியத்துவம்

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகை த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த கதாபாத்திரத்திற்கு அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. த்ரிஷாவின் கேரியரில் மிக முக்கியமான கேரக்டராக குந்தவை இருக்கும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வீடியோ எடுத்து வைத்துள்ளேன்

வீடியோ எடுத்து வைத்துள்ளேன்

த்ரிஷா மட்டும் இல்லாமல் அணைத்து கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். அடுத்த வாரம் இந்த படம் வெளிவர இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. அப்போது நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, எனக்கு சுருட்டை முடி. இப்படத்திற்காக நீளமாக முடி வளர்க்க வேண்டும். இதற்கு மேல் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது என்று, அதை ஸ்லோவ் மோஷனில் நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்.

எது செய்தாலும் சிறப்பாக இருக்கும்

எது செய்தாலும் சிறப்பாக இருக்கும்

இதன் பிறகு சிறப்பாக என்ன செய்ய போகிறாய்? என்று அண்ணன் கூட கேட்டார். நீ தனி ஒருவன் 2 இயக்கு என்று கூறினேன்.

ஆனாலும், எனக்கும் அது தான் தோன்றியது. இதைப் பற்றி மணி சாரிடமும் கேட்டேன். அதற்கு அவர், இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் என்று கூறினார். இதை விட நல்ல படம் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படத்தில் கற்று கொண்ட அனுபவங்களைக் கொண்டு இனி எது செய்தாலும் சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

சுறுசுறுப்பாக இருப்பார்

சுறுசுறுப்பாக இருப்பார்

பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இப்படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் பலரின் கனவை நிஜமாக்கியுள்ளார். படப்பிடிப்பின் நாங்கள் சோர்வாடையும் போதெல்லாம் மணி சாரை பார்ப்போம். அவர் ஓடி கொண்டே இருப்பார். அவரே இடைவிடாமல் செயல்படும் போது நமக்கு என்ன என்று சுறுசுறுப்புடன் பணியாற்ற சென்று விடுவோம் என்று ஜெயம் ரவி பெருமையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X