சிவகார்த்திகேயனின் டான் எப்போது ரிலீஸ் தெரியுமா.... வெளியானது புதிய தகவல்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க கல்லூரி கதைக்களத்தில் கலகலப்பாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் டான் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் எப்போது ரிலீஸ் ஆக உள்ளது என்ற புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

டான்

டான்

தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின் படங்கள் என்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். தொடர்ந்து கலகலப்பான திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது அதே பாணியில்தான் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

இயக்குனர் அட்லியிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கி வர இதன் படப்பிடிப்பு கோயமுத்தூரில் உள்ள பிரபல கல்லூரியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சூரி,ஷிவாங்கி முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் என பலர் இதில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக பிரியங்கா மோகன் இதில் நடித்து வருகிறார்.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு

தொடர் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்பொழுது லாக்டவுன் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். வழக்கம்போல அனிருத் இப்படத்திற்கு இசை அமைக்க லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

புத்தாண்டை குறிவைத்து

புத்தாண்டை குறிவைத்து

இந்நிலையில் டான் படத்தின் ரிலீஸ் அப்டேட் கிடைத்துள்ளது . வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை குறிவைத்து படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் கட்டாயமாக திரையரங்குகளில் தான் வெளியாகும். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X