»   »  தெக்கத்தி வாசத்தோடு 'குயின்' தமிழ் ரீமேக்... எப்போ ஷூட்டிங்?

தெக்கத்தி வாசத்தோடு 'குயின்' தமிழ் ரீமேக்... எப்போ ஷூட்டிங்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மார்ச் 2014-ல் விகாஸ் பஹல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் 'குயின்'. அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது.

விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. நீண்ட நாட்களாக தமிழில் 'குயின்' ரீமேக் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது. சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குவதாக முன்பு தகவல்கள் வெளியாகின.

இயக்குநர் யார் :

இயக்குநர் யார் :

நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் 'குயின்' தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 80, 90-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்த இவர் 'உத்தம வில்லன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமன்னா விலகல் :

தமன்னா விலகல் :

'குயின்' தமிழ் ரீமேக்கில் கங்கனா ரனாவத் ரோலுக்கு தமன்னா ஒப்பந்தமாகி இருந்தார். இப்படம் தொடங்க தாமதமாகிக் கொண்டே இருந்ததால், தமன்னா இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

காஜல் அகர்வால் இன் :

காஜல் அகர்வால் இன் :

தமன்னா விலகியைதையடுத்து, தற்போது கங்கனா ராவத் வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'குயின்' படத்தின் கதையை அப்படியே தென்னிந்தியக் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கவுள்ளார்கள்.

படப்பிடிப்பு :

படப்பிடிப்பு :

அக்டோபர் மாதம் மதுரையில் படப்பிடிப்பு துவங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை படப்பிடிப்பைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

English summary
Tamil remake of 'Queen' shooting starts on next month in Madurai. Here, the 'Queen' story was changed into south Indian culture.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil