விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் 2 ... ஷுட்டிங் எப்போ ஆரம்பம்னு தெரியுமா ?
சென்னை : 2016 ல் வெளியான விஜய் ஆன்டனியின் பிளாக்பஸ்டர் படமான பிச்சைக்காரன், மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூலில் சாதனை படைத்த பாகுபலி படம் உலக அளவில் டிவி ஒளிபரப்பில் பெற்ற வசூலை முறித்த தென்னிந்திய படம் பிச்சைக்காரன் தான்.
அதிலும் இந்திய அரசு 2018 ல் அமல்படுத்திய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்த திட்டம் பற்றி 2016 ல் வெளியாகின பிச்சைக்காரன் படத்தில் காமெடியாக கூறப்பட்டிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. தாய்- மகன் பாசம், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன், காதல் ஆகியவற்றை கலந்து சொன்ன கதை பிச்சைக்காரன்.

பிச்சைக்காரன் 2
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் தற்போது படக்குழுவினர் இறங்கி உள்ளனர். இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது.

2022 ல் ரிலீசா
பிச்சைக்காரன் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. வித்தியாசமான லுக்கில், 2022 ம் ஆண்டு தியேட்டர் ரிலீஸ் என்ற அறிவிப்புடன் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மாற்றப்பட்ட டைரக்டர்
ஆனால் சமீபத்தில் இந்த படத்தை விஜய் ஆன்டனியே இயக்க போவதாக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். இதன் மூலம் இதுவரை இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளராக இருந்த விஜய் ஆன்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் டைரக்டராகவும் அவதாரம் எடுக்க போகிறார்.

பட வேலைகள் துவங்கலியே
2021 ம் ஆண்டில் 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை படத்தின் வேலைகள் துவங்கப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி 2022 ல் படத்தை ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் குழப்பமடைந்துள்ளனர். ஏற்கனவே முடிக்கப்பட்ட படங்களே இதுவரை ரிலீஸ் தேதியை அறிவிக்காமல், காத்திருக்கின்றன.

எப்போ ஷுட்டிங் ஆரம்பம்
லேட்டஸ்ட் தகவலின்படி, பிச்சைக்காரன் 2 படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் 1 ம் தேதியான இன்று பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாம். இந்த படமும் பிச்சைக்காரன் படத்தை போல் வித்தியாசமான கதை களம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

பல படங்களில் விஜய் ஆன்டனி
பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆன்டனியுடன் ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார். விஜய் ஆன்டனி ஏற்கனவே ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











