»   »  சினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ்

சினிமாவை விட்டு ஓடணும்னு நினைத்தபோது எல்லாம்...: ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறையை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும்போது எல்லாம் நல்ல கதாபாத்திரம் தேடி வந்தது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ். இளம் நாயகியாக இருந்தாலும் துணிந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் திரையுலக பயணம் குறித்து அவர் கூறுகையில்,

படங்கள்

படங்கள்

நான் நடிக்கத் துவங்கியபோது நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே நேரம் நீ எல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது, பிற ஹீரோயின்கள் போன்று நீ சிவப்பாக இல்லை என்று என்னை பார்த்து கமெண்ட் அடித்தார்கள்.

சிவப்பு இல்லை

சிவப்பு இல்லை

நான் சிவப்பு இல்லை மாநிறம் தான். அதனால் வழக்கமான ஹீரோயின்கள் போன்று நான் இல்லை. மேலும் நான் தமிழ் பேசுகிறேன் அதுவும் கூட ஒரு பிரச்சனையே.

ஹீரோயின்

ஹீரோயின்

நான் ஹீரோயினாக செட்டாக மாட்டேன் என மக்கள் நினைக்க பல காரணம் இருந்தது. சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டு நிரூபித்துக்காட்ட வேண்டும் என நினைத்தேன்.

சினிமா

சினிமா

நம்மால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று நான் நினைத்தது உண்டு. சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தபோது எல்லாம் நல்ல பட வாய்ப்பு என்னை தேடி வந்தது என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

English summary
Actress Aishwarya Rajesh said that whenever she decided to quit cine industry, good movie offers came her way.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil