twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை எங்கிருந்து வருகிறது... ஒரு இசையமைப்பாளரின் சுவாரஸ்யமான பதில்!

    |

    சென்னை: இசை எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு, மரகதகாடு படத்தின் இசையமைப்பாளர் சொன்ன சுவாரஸ்யமான பதில் தான் இது.

    'இசை எங்கிருந்து வருகிறது'... தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த காமெடி வசனம் இது. கிங் படத்தில் வடிவேலு செய்த இந்த காமெடியை நம் வாழ்வில் பலமுறை நாம் பயன்படுத்தி இருப்போம்.

    ஆனால் காமெடியாக மட்டுமே கடந்துபோகும் கேள்வி அல்ல இது. உண்மையில் இசை எங்கிருந்து தான் வருகிறது.

    விழா ஒன்றில் மரகதகாடு படத்தின் இசையமைப்பாளர் ஜெயபிரகாஷை தற்செயலாக சந்தித்து பேசிய போது இந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். சிரித்துகொண்டே அவர் சொன்ன பதில்...

    சவாலான படம்

    சவாலான படம்

    "மரகதகாடு படத்துக்கு இசையமைத்தது மிகவும் சவாலான விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க வனம் சார்ந்த படம். இதனால் படத்தின் இசை உயிரோட்டமாக இருக்க வேண்டும் என விரும்பி இசையமைத்தேன்.

    சிறப்பான பாடல்கள்

    சிறப்பான பாடல்கள்

    அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படத்துக்கு இசையமைப்பதற்காக காணி மக்களை சந்தித்து, அவர் எந்த மாதிரியாக இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்து, அந்த வாத்தியங்களை தான் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.

    இசை ஆத்மார்த்தமானது

    இசை ஆத்மார்த்தமானது

    இசை என்பது வெறும் எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வருவதில்லை. அது ஆத்மார்த்தமானது. வாத்தியங்களும் வாத்தியக் கலைஞர்களும் தான் இசையின் அருவிகள். இங்கிருந்து தான் இசை பிறக்கிறது. அதனால் தான் நான் எனது பாடல்களில் லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்களை பயன்படுத்துகிறேன்.

    எல்லோரும் வெற்றி பெற முடியாது

    எல்லோரும் வெற்றி பெற முடியாது

    இன்றைய சூழ்நிலையில் யார் வேண்டுமானாலும் இசையமைப்பாளராகிவிடலாம். ஆனால் எல்லோரும் வெற்றி பெற முடியாது. நமது பாடல் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்து தான் அந்த பாடலின் வெற்றி அமையும்.

    தயக்கத்துடன் கிளம்பினேன்

    தயக்கத்துடன் கிளம்பினேன்

    இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு கன்னியாகுமரியில் இருந்து சென்னை கிளம்பிய போது, எனக்குள் நிறைய தயக்கங்கள் இருந்தன. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் இத்துறையில் நம்மால் என்ன சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தொடர் முயற்சிகளின் காரணமாக மூன்று படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்

    சமூக நலனுக்காக இசை

    சமூக நலனுக்காக இசை

    சமூக நலன்கருதி சில பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக பாடல் அமைக்க திட்டமிட்டுள்ளேன். ஆனால் பொருளாதார ரீதியாக யாரேனும் உறுதுணையாக இருந்தால் நன்றாக இருக்கும்", என்கிறார் ஜெயபிரகாஷ்.

    English summary
    The Marakathakadu music director Jeyprakash explains the source of music.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X