»   »  தோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா?

தோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த பொதுதேர்தலின் போது அதிமுக கட்சிக்கு தவுசண்ட் வாலாவாக பிரசாரம் செய்தவர் நடிகை விந்தியா. கருணாநிதி முதல் விஜயகாந்த் வரை கிழி கிழி என்று கிழித்தவரை ஜெயலலிதாவே அழைத்து பாராட்டினார்.

ஜெயலலிதா இருந்தவரை ஆக்டிவாக இருந்த விந்தியா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வெளியே வரவே இல்லை. விந்தியாவை கட்சிக்குள் கொண்டு வந்த ஜெயலலிதாவின் முக்கிய உதவியாளர் சசிகலா தலைமை பிடிக்காமல் விலகி விட்டதால் அதே நிலைமை விந்தியாவுக்கும் ஏற்பட்டுவிட்டது. இப்போது ஆர்கே நகர் இடைதேர்தலுக்கு பிரசாரம் செய்யத் தேடியிருக்கிறார்கள். மறுத்து விட்டாராம்.

Where is ADMK star campaigner Vindhya? An update

எங்கிருக்கிறார் என்று விசாரிக்க தொடர்பு கொண்டால் அவரது உதவியாளர் போனை எடுத்து 'மேடம் ஸ்கின் அலர்ஜிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காங்க...' என்று பதில் வருகிறது.

உண்மையில் அதிருப்தியில் ஒதுங்கியிருக்கிறாரா? தோல் சிகிச்சை என்ற பெயரில் பதுங்கி இருக்கிறாரா?

English summary
Sources say that ADMK star campaigner actress Vindhya has refused to campaign for the party in RK Nagar by election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil