Just In
- 41 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 54 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆமா.. இவ்வளவு பொறி பறக்குதே.. அட்லி எங்கே?
சென்னை: எல்லாத்துக்கும் காரணம் அட்லிதான் என்று ஒரு குரூப் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அவர்தான் பட்ஜெட்டையும் தாண்டி பிகில் படத்துக்கு செலவை இழுத்து விட்டார். இந்த பிரமாண்ட செலவுகள்தான் வருமான வரித்துறை ரெய்டுக்கு முக்கியக் காரணம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
விஜய் இப்போது மாஸ் ஹீரோவாகி விட்டார். அவரது படங்களை மிக மிக ரிச்சாக எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. காரணம், உச்ச நடிகராக மாறியிருப்பதால் எல்லாமே பிரமாண்டமாகவே இருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில்தான் பிகில் படத்தை மிகப் பெரிய பொருட் செலவில் படத்தைத் தயாரித்தனர். முதலில் திட்டமிட்டது ரூ. 150 கோடி அளவிலான பட்ஜெட்டில்தான். ஆனால் இது எகிறி விட்டதாம். காரணம், அட்லியின் திட்டமிடப்படாத வேலைகள் என்று சொல்கிறார்கள்.
12 வருஷம் கழிச்சு இந்தியில் ரீமேக் ஆகும் பொல்லாதவன்.. கணேஷ் வெங்கட்ராம் யார் கேரக்டர்ல நடிக்கிறார்?

ஏகப்பட்ட காட்சிகள்
ஏகப்பட்ட காட்சிகளை ஷூட் செய்துள்ளாராம் அகில். கிட்டத்தட்ட 2 படமாக பிரிக்கலாம் என்று கூறும் அளவுக்கு வளைத்து வளைத்து எடுத்துள்ளார். அது போதாதென்று ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள் வேறு. எல்லோரையும் வைத்து போட்டுக் குழப்பியதால் கடைசியில் எதை வைப்பது எதை எடுப்பது என்பதில் குழப்பமாகி விட்டது. இதில் பல காட்சிகள் வெட்டுப்பட்டுப் போய் விட்டன.

தாறுமாறு செலவு
இப்படி பெரிய அளவில் காட்சிகளைப் படமாக்கி விளையாடியதால் செலவும் கூடி விட்டது. இந்த நிலையில் தயாரிப்புத் தரப்பு எழுதிய சம்பளக் கணக்குதான் வருமான வரித்துறையின் கழுகுக் கண்களில் சிக்கியுள்ளது. காரணம் சில சம்பளத்தைப் பார்த்து, இது எப்படி இவ்வளவு கொடுத்தீங்க, ரசீதுகளைக் கொடுங்க என்று கேட்க குழப்பமாகியுள்ளது தயாரிப்புத் தரப்பு.

எகிறிய சம்பளம்
பல வேலைகளை அவுட்சோர்சிங் போல செய்துள்ளது தயாரிப்புத் தரப்பு. அது சினிமாவில் வழக்கமானதுதான். ஆனால் அவர்கள் தாக்கல் செய்த சம்பளக் கணக்குதான் தயாரிப்புத் தரப்பையும் சேர்த்து சிக்கலுக்குள்ளாக்கி விட்டதாம். வழக்கமாக காஸ்ட்யூம், துணை நடிகர்கள் போன்றோருக்கு தரப்படும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக அதாவது கோடிக்கணக்கில் கொடுத்ததாக கணக்கு கூறப்பட்டதுதான் சந்தேகத்திற்குக் காரணமாம்.

எங்கே அட்லி
இந்த இடத்தில் விஜய் உள்பட பலரையும் வளைத்து வளைத்து விசாரணை நடத்திய வருமான வரித்துறை இன்னும் அட்லி பக்கம் திரும்பவில்லை. அவரது சம்பளம் உள்ளிட்டவை குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவில்லை. விளக்கம் கேட்டுள்ளனரா என்றும் தெரியவில்லை. ஆனால் அட்லியும் அதுகுறித்துக்கவலைப்படவில்லை. அவர் தற்போது தனது புதிய படம் தொடர்பான வேலைகளில் படு பிசியாக இருக்கிறாராம்.

எதையோ தேடுகிறார்கள்
ஆனால் வருமான வரித்துறை எதையும் லேசில் விடுவதாக தெரியவில்லை. தோண்டிக் கொண்டே இருக்கின்றனராம். ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டே இருக்கின்றனராம். தர்பார் படத்தில்.. எதையோ தேடுகிறார்.. ஆனால் எதைத் தேடுகிறார் என்று தெரியவில்லை என்று வருமே.. அந்த வசனம் போல ஐடியும் எதையோ தேடிக் கொண்டிருக்கிறது.. எப்ப கிடைக்குமோ தெரியவில்லை.. !