»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து பிந்து மாதவி கிளம்புகிறாரா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து பிந்து மாதவி கிளம்புகிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறிய பிறகு அதை பார்க்கும் ஆர்வம் பார்வையாளர்களிடம் இல்லை. காயத்ரி, ரைசா மூஞ்சிக்காக எல்லாம் பிக் பாஸ் பார்க்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் பார்வையாளர்களுக்கு புது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ப்ரொமோ

இன்று வெளியிடப்பட்ட இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் பிந்து மாதவி எதுவும் பேசவில்லை. ஒரேயொரு வீடியோவில் அதுவும் ஒரு ஓரத்தில் இருக்கிறார். பிற போட்டியாளர்கள் கணேஷ் வெங்கட்ராமை டார்கெட் செய்கிறார்கள்.

பிந்து

முன்பு ஓவியா இல்லாமல் ப்ரொமோ வீடியோ வந்தது. அதன் பின்னர் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது ஓரம்கட்டப்படும் பிந்துவும் கிளம்பி விடுவாரோ?

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே எந்த வம்புக்கும் செல்லாமல் சமத்து பிள்ளையாக இருப்பவர் பிந்து மாதவி. காயத்ரியை நீ எல்லாம் ஒரு தலைவியா என்று கேட்டு அதிர வைத்தவர். ஒரு வேலை ஓவியா போன கையோடு பிந்துவும் கிளம்பிவிடுவாரோ?

ஓவியா

ஓவியா

ஓவியாவை திருப்பி அழைத்து வாங்க, காயத்ரி, ரைசா, சினேகனை எல்லாம் பார்க்க முடியாது என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bindhu Madhavi is not seen saying anything in any promotional videos of Big Boss released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X