ஜி பி முத்து எங்கே?..பதறி ஓடிய சாந்தி..அதுதான் தாய் மனசு

சென்னை: பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக இருக்கிறார் ஜி.பி.முத்து.

இரண்டு நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜி.பி.முத்துவுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்படுகிறது.

இன்று காலை ஜி.பி.முத்து எங்கே என்று கேட்க வெளியில் இருக்கிறார் என்றவுடன் சாந்தி பதறி அடித்து ஓடிப்போய் நலம் விசாரித்தார்.

பிக்பாஸ் வீட்டின் பிரபலம்

பிக்பாஸ் வீட்டின் பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் ஒரு வாரம் கடந்த நிலையில் ஒவ்வொருவர் மனநிலையும் வெளிப்பட தொடங்கியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களில் முன்னணியில் இருப்பவர் என்று சொன்னால் அது ஜி.பி.முத்துவைச் சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் அனைவரின் மனதை கவர்ந்த இருவர் என்று தேர்ந்தெடுக்கச் சொன்னபோது அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்வு செய்வது ஜி.பி.முத்துவையும், சாந்தியையும். இருவரின் அணுகுமுறையும் தங்களை வெகுவாக கவர்ந்தது என்று போட்டியாளர்கள் சொன்னார்கள்.

 சாந்தியின் தாய்மை குணம்

சாந்தியின் தாய்மை குணம்

பிக்பாஸ் வீட்டில் வந்த முதல் நாள் இரவு முதல் போட்டியாளர்கள் அனைவருக்கும் சமைத்து தருவது, அவர்களுக்காக நல்ல ருசியான சாப்பாட்டை சமைத்து தருவதற்காக மெனக்கிடுவது என சாந்தி இன்று வரை அந்த பொறுப்பை சிறப்பாக செய்து வருகிறார். மற்றவர்கள் என்னதான் அவரவர் வேலையில் மூழ்கினாலும் அல்லது சும்மா சுற்றிக் கொண்டிருந்தாலும் சாந்தி தனது வேலையை தொடர்ந்து செய்து செய்து கொண்டுத்தான் இருக்கிறார். இந்நிலையில் சாந்தியை ஸ்வாப் செய்து வெளியேற்றினாலும் அது பற்றி கவலைப்படாமல் தனது வேலையை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

 சாந்தியின் அணுகுமுறை

சாந்தியின் அணுகுமுறை

சாந்தி வயதில் மூத்தவர் என்பதால் அனைவருடனும் நெருங்கி பழகி அவரவருடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பாராக இருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்று யாராவது ஒருவர் வந்துவிடுவார்கள் சினேகன், வனிதா, தாமரை என கிச்சன் ரூமை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மையில் பெயரெடுத்தவர்கள் நல்ல பெயருடன் வெளியே போனார்கள். அதேபோல் இந்த சீசனில் சாந்தி தனது நடத்தையால் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறார் அதற்கு ஒரு உதாரணமாக இன்று காலை நடந்த நிகழ்ச்சியை சொல்லலாம்.

ஜி.பி.முத்துவுக்கு வைரஸ் காய்ச்சல்

ஜி.பி.முத்துவுக்கு வைரஸ் காய்ச்சல்

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த பின் மகேஸ்வரி, மாஸ்டர் உள்ளிட்ட சிலருக்கு காய்ச்சல் இருந்தது. சனிக்கிழமை முதல் ஜி.பி.முத்து கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக ஹவுஸ் மேட்ஸ்கள் தெரிவித்தனர். அவருக்கு ட்ரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை ஜிபி முத்து வழக்கமாக குளித்து முடித்து பிரஷ்ஷாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் ஜி.பி.முத்து வெளியில் கார்டன் ஏரியாவில் ஒரு ஓரமாக சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். சேவ் செய்யப்படாத முகத்துடன் கையில் டிரிப்ஸ் ஏற்றிய பிளாஸ்திரி உடன் அவர் உறங்கிக்கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

ஜி.பி.முத்து எங்கே? பதறி ஓடி நலம் விசாரித்த சாந்தி

ஜி.பி.முத்து எங்கே? பதறி ஓடி நலம் விசாரித்த சாந்தி

வழக்கம்போல் ஹவுஸ்மேட்ஸ்களில் பலர் அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சாந்தி தொடர்ச்சியாக காலையில் டிபன் தயாரிப்பது மற்ற வேலைகள் இருந்தவர் திடீரென மணிகண்டனிடம் ஜிபி.முத்து எங்கே ஆளைக்காணோம் என்று விசாரிக்க வெளியில் படுத்திருக்கிறார் என்றவுடன் பதறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடினார். கதவை திறந்தவுடன் கார்டன் ஏரியாவில் ஒரு ஓரமாக படுத்திருந்த ஜி.பி.முத்துவை பார்த்து "ஐயோ" என்று அலறியபடி வேகமாக ஓடி சென்று அவரை தொட்டுப் பார்த்தார். என்ன செய்யுது என்று கேட்க ஒன்னும் இல்ல பரவால்ல இப்போ ட்ரிப்ஸ் ஏத்துனாங்க என்று ஜிபி.முத்து பதில் சொல்ல "இருங்க உங்களுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டு வருகிறேன், என்று சொல்லி உள்ளே சென்று அவருக்காக ரவையை போட்டு கஞ்சி காய்ச்சி, சுடு தண்ணீர் உடன் திரும்ப வந்து கொடுத்து "சாப்பிடுங்க சாப்பிட்டுட்டு மறக்காம மாத்திரை போட்டுக்கமா" என்று சொல்லிவிட்டு சென்றார்.

வழக்கம்போல் போலித்தனம் காட்டும் ஹவுஸ்மேட்ஸ்கள்

வழக்கம்போல் போலித்தனம் காட்டும் ஹவுஸ்மேட்ஸ்கள்

ஆனால் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் வழக்கம்போல் அவரவர்கள் பாட்டு பாடிக்கொண்டும், அலங்கரித்துக் கொண்டும் சிலர் வேலை செய்து கொண்டும் இருந்ததை காண முடிந்தது. ஆடும் வரைதான் மனிதன் ஆட்டம் அடக்கினால் மதிப்பு இல்லை என்பது என்று ஜிபி.முத்து அவரது நிலையைப்பார்த்தபோது தெரிந்தது. பின்னர் ஜி.பி.முத்துவிடம் ராம்குமார், விக்ரம், மகேஸ்வரி, குயின்சி ஆகியோர் சென்று பேசியதை காண முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X