»   »  என்னது, ஓவியா பிக் பாஸ் வீட்டில் இல்லையா?

என்னது, ஓவியா பிக் பாஸ் வீட்டில் இல்லையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேட்கத் துவங்கியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை நான் எங்க வீட்டுக்கு போகிறேன் என்று ஓவியா அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தனை நாட்களாக ஓவியாவை நல்லவராக காட்டிய பிக் பாஸ் திடீர் பல்ட்டி அடித்துள்ளார்.

தற்போது ஓவியாவை கெட்டவராக காட்டி வருகிறார் பிக் பாஸ்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

ஒரு வேளை ஓவியாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க தான் பிக் பாஸ் திடீர் நாடகம் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஓவியா ஆர்மிக்காரர்கள் கவலையில் உள்ளனர்.

ஓவியா

ஓவியா

ஓவியாவை மட்டும் அனுப்பி வைத்தீர்கள் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே மாட்டோம். யாருமே பார்க்கவும் மாட்டார்கள் என்று கூறி வருகிறார்கள் ஓவியா ஆர்மிக்காரர்கள்.

போட்டி

இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கயிறு இழுக்கும் போட்டி நடைபெறுகிறது. போட்டியில் ஓவியா இல்லை.

எங்கடா?

எங்கடா?

ப்ரொமோ வீடியோவில் ஓவியாவை தவிர மற்ற அனைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் உள்ளனர். இதை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் எங்கள் தலைவி எங்கடா பிக் பாஸு என்று கேட்டு வருகிறார்கள்.

English summary
Oviya is seen nowhere in the new promo video of Big Boss. This has irritated Oviya Army which is very fond of that actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil