»   »  நாளை வெளியாகும் படங்களில் உங்கள் சாய்ஸ் எது?

நாளை வெளியாகும் படங்களில் உங்கள் சாய்ஸ் எது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி விவேகம் படம் தமிழ்நாட்டின் 75% திரையரங்குகளில் ஓடி வருகிறது. இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்தைத் தொடர பல திரையரங்குகள் முடிவு செய்துள்ளதால் சில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடிப்பில் சி.வி.குமார் இயக்கிய 'மாயவன்' படம் தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளிப்போகிறது. அடுத்த வாரத்தில் இந்தப் படம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இரு வாரங்களுக்கு முன்பு எந்தத் தமிழ்ப்படமும் வெளியாகவில்லை. 'விவேகம்' படம் வெளியானதையடுத்து தற்போது சில திரைப்படங்கள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கின்றன. நாளை வெளியாகும் படங்களில் உங்களின் சாய்ஸ் எது..?

ஒரு கனவு போல :

ஒரு கனவு போல :

இயக்குனர் விஜயசங்கர் இயக்கத்தில், ராமகிருஷ்ணன், அமலா ரோஸ், சௌந்தராஜன் மற்றும் சார்லி நடித்துள்ள அதிரடி காதல் திரைப்படம் 'ஒரு கனவு போல'. இந்தத் திரைப்படம் நட்பை மையமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அதுபோக, முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் அணுகியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

புரியாத புதிர் :

புரியாத புதிர் :

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்த 'புரியாத புதிர்' நாளை ரிலீசாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி படத்தை இயக்கியிருக்கிறார். எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரங்கு பொம்மை :

குரங்கு பொம்மை :

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் இயக்குநர் நித்திலன் இயக்கிய திரைப்படம் குரங்கு பொம்மை. இதில் நடிகர் விதார்த், டெல்னா டேவிஸ், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா விதார்த்தின் தந்தையாக நடித்திருக்கிறார். இயக்குநர் நித்திலனின் குறும்படமான 'புதிர்' திரைப்படத்தின் தாக்கம்தான் 'குரங்கு பொம்மை' திரைப்படம்.

பிறமொழிப் படங்கள் :

பிறமொழிப் படங்கள் :

மலையாளத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ள 'ஆடம் ஜான்', நிவின் பாலியின் 'Njandukalude naattil oridavela', மம்முட்டி நடிப்பில் 'Pullikkaran staraa' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

இலியானா நடிப்பில் :

இலியானா நடிப்பில் :

தெலுங்கில் பூரி ஜெகந்நாத்தின் 'பைசா வசூல்' திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தியில், அஜய் தேவ்கன், இலியானா ஆகியோர் நடிப்பில் 'பாத்ஷாஹோ' திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

English summary
The release of some films have been postponed as many theaters have decided to continue 'Vivegam' in the second week. In the meanwhile, Vijay Sethupathi's 'Puriyaatha puthir' will be released tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil