»   »  பொங்கலுக்கு கபாலியா? விஜய் படமா?

பொங்கலுக்கு கபாலியா? விஜய் படமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடிக்கும் கபாலி, விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் இரண்டையும் ஒரே நேரத்தில் தயாரிக்கிறார் கலைப்புலி தாணு. இரண்டு படங்களுக்கும் மொத்த பட்ஜட் கிட்டத்தட்ட ரூ 200 ப்ளஸ் கோடிகள்.

தமிழ் சினிமாவில் இதுவரை வேறு எந்த தயாரிப்பாளரும் இப்படி இரு மெகா படங்களை ஒரே நேரத்தில் தயாரித்ததில்லை.


Which movie will release first Kabali or Vijay 59?

இரு படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டவை. விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.


ரஜினி படத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட பாதிப் படம் முடிந்துவிட்டது. ஜனவரிக்குள் மொத்தப் படமும் முடிந்துவிடும் என்ற நிலை. விஜய் படமும் ஜனவரிக்கு முன் முடிந்துவிடும் என்கிறார்கள்.


பொங்கல் என்பது மிகப் பெரிய வசூல் சீஸன். இந்த சீஸனைக் குறிவைத்தே பெரிய படங்கள் எடுக்கப்படுகின்றன. கலைப்புலி தாணு இந்தப் பொங்கலுக்கு ரஜினி படத்தை வெளியிடப் போகிறாரா அல்லது விஜய் படத்தையா?


இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.

English summary
Kalaipuli Thaanu, who is currently producing to mega movies Rajinikanth's Kabali and Vijay's untitled movie. Among these two, which one will come first, Kabali or Vijay 59? Coming days will give us a clear picture.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil