பாகுபலி படமே பொன்னியின் செல்வன் காப்பி தான்...இணையத்தை அலற விடும் ரசிகர்கள்
சென்னை : பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் படத்தின் டீசரும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யூட்யூப்பில் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களில் 20 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது பொன்னியின் செல்வன். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது. அதே சமயம் ரசிகர்களிடம் இது பெரிய மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமே நடந்து வருகிறது.

டிரோல் செய்யும் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் டீசரை பார்த்து விட்டு, பாகுபலி ரசிகர்கள் பலர், மணிரத்னம் பாகுபலி படத்தை காப்பி அடித்திருக்கிறார். டீசரின் ஆரம்பத்தில் வரும் படக் காட்சிகள், போர் காட்சிகள், கார்த்தியின் போர்கள கெட்அப் போன்றவை பாகுபலி படத்தில் வரும் சீன்களை காப்பி அடித்திருப்பதாக கூறி, பொன்னியின் செல்வன் டீசரை டிரோல் செய்து வந்தனர்.

பாகுபலியே காப்பி தான்
ஆனால் பொன்னியின் செல்வன் ரசிகர்கள், பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து பல ஆதாரங்களை எடுத்துக் காட்டி, பொன்னியின் செல்வன் தான் ஒரிஜினல். பாகுபலி படமே பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள பல காட்சிகளை காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் என கூறி பாகுபலி படங்களையும், ராஜமெளலியையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மணிரத்னமே சொன்ன தகவல்
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் காட்சிகள், வசனங்களின் Reference பல படங்களில் இடம்பெற்றுள்ளது பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களால் கண்டுபிடிக்க முடியும். கமலே பல படங்களில் பொன்னியின் செல்வன் வசனங்களை பயன்படுத்தி உள்ளார். அவ்வளவு ஏன், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் கூட பொன்னியின் செல்வன் நந்தினி கேரக்டரை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது தானாம். படையப்பா - நீலாம்பரி மோதலை பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் - நந்தினி சந்திக்கும் காட்சிகளில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இந்த கேரக்டர் இப்படி வந்தது தானா
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் காட்சிகள், வசனங்களின் Reference பல படங்களில் இடம்பெற்றுள்ளது பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களால் கண்டுபிடிக்க முடியும். கமலே பல படங்களில் பொன்னியின் செல்வன் வசனங்களை பயன்படுத்தி உள்ளார். அவ்வளவு ஏன், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கேரக்டர் கூட பொன்னியின் செல்வன் நந்தினி கேரக்டரை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டது தானாம். படையப்பா - நீலாம்பரி மோதலை பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் - நந்தினி சந்திக்கும் காட்சிகளில் பார்க்கலாம் என கூறப்படுகிறது.

அடபாவிகளா...இதுவே காப்பி தானா
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆற்றில் மூழ்கும் போது, குழந்தையை கையில் தாங்கி காப்பாற்றும் சீன் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இதே போன்ற சீன் பொன்னியின் செல்வனிலும் வரும். அதாவது, ராஜராஜ சோழனான அருள்மொழி வர்மன், சிறு வயதாக இருக்கும் போது படகில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் தவறி காவிரி ஆற்றிற்குள் விழுந்து விடுவார். அப்போது ஒரு பெண், அருள்மொழி வர்மனை காப்பாற்றி, படகில் இருந்தவர்களிடம் சேர்ப்பாள். பொன்னி என அழைக்கப்படும் காவிரி தாயே பெண்ணாக வந்து அருள்மொழி வர்மனை காப்பாற்றியதால் தான் அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் வந்தது என கல்கி தனது நாவலில் குறிப்பிட்டிருப்பார்.அருள்மொழி வர்மனை காப்பாற்றிய பெண், மந்தாகினி என்ற ஊமை ராணி தான் என நாவலின் பிற்பகுதியிலும் குறிப்பிட்டிருப்பார்.

அட ஆமாம் இதுவும் இருக்கே
பாகுபலி படத்தில் ராஜமெளலி கையாண்ட போர் தந்திர யுக்திகள் சோழ மன்னர்களின் போர் திறன்களை குறிக்கும் இடங்களில் கையாளப்பட்டிருக்கும். அதே போல் பொன்னியின் செல்வன் டீசரின் ஆரம்பத்தில் வரும் அன்னப் பறவை போன்ற படகு காட்சிகள், பாகுபலி படத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த சீன்கள் பொன்னியின் செல்வன் நாவலின் துவக்கத்திலேயே, சோழ நாட்டிற்கு வரும் வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் தனது படைகளுடன் வருவதை பார்க்கும் சீனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வளவு விஷயங்களை கவனிச்சிருக்காங்க
டீசரில், முடி சூட்டு விழா ஒன்றும் காட்டப்படும். இதே போன்ற சீன் பாகுபலியில் வைக்கப்பட்டிருக்கும்.ஆனால் ராஜராஜ சோழனின் முடிசூட்டு விழாவில் இதே போன்ற பிரம்மாண்ட காட்சிகளை கல்கி விளக்கி இருப்பார். பாகுபலி தான் பொன்னியின் செல்வனின் நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள விஷயங்களை தான் மணிரத்னம் அப்படியே படமாக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிட்ட விஷயங்களையும், பாகுபலி பட சீன்களையும் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் ரசிகர்கள், பாகுபலி ரசிகர்களுக்கு பதிலடித்து கொடுத்து வருகின்றனர்.பொன்னியின் செல்வன் நாவலை வைத்து பெரிய ஆராய்ச்சியே நடத்தி, இவ்வளவு விஷயங்களை ரசிகர்கள் பட்டியலிடுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Recommended Video

பாகுபலி படமே வந்திருக்காது
அது மட்டுமல்ல பொன்னியின் செல்வன் நாவலை யாரும் படமாக எடுக்கவே மாட்டார்கள் என நினைத்து அதில் உள்ள பல சீன்களை ராஜமெளலி பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து விட்டதால் பாகுபலி பட சீன்கள் எதிலிருந்து காப்பி அடித்து, சுடப்பட்டது என வெளிச்சத்திற்கு வந்து விட்டது. முதலில் வந்ததால் பாகுபலி ஒரிஜினல், பொன்னியின் செல்வன் காப்பி என்று ஆகி விடுமா. பொன்னியின் செல்வன் நாவலை காப்பி அடித்து தான் பாகுபலி படத்தையே எடுத்துள்ளார்கள். என்ன பொன்னியின் செல்வன் கொஞ்சம் முன்பே வந்திருந்தால் பாகுபலி என்ற படமே வந்திருக்காது என பாகுபலி படத்துடன் ராஜமெளலியையும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











