ஜாய் கிரிஸில்டாவின் அட்டாக் ஒரு பக்கம்.. மறுபக்கம் மாதம்பட்டி ரங்கராஜ் செம விருந்துல இருக்காரே!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ்தான் கடந்த சில மாதங்களாக கோலிவுட்டின் தலைப்பு செய்திகளில் இருக்கிறார். ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து செட்டிலாகியிருக்கும் அவர்; ஜாய் கிரிஸில்டாவையும் திருமணம் செய்த புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஜாய் கிரிஸில்டா.

தமிழ்நாட்டில் இருக்கும் செலிபிரிட்டிகளின் வீட்டில் சமைத்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதில் கிடைத்த பெயரை வைத்து இந்திய அளவில் பிரபலங்களின் விசேஷங்களுக்கு சமைக்க ஆரம்பித்தார். நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். படம் டீசன்ட்டான வரவேற்பை பெற்றது. இவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி: இதற்கிடையே ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரங்கராஜ். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். ஸ்ருதி வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். சுமூகமாக இவர்களது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் மாதம்பட்டி ரங்கராஜ்.

While Joy Crizildaa attacks from one side Madhampatty Rangaraj is busy with his work
Photo Credit:

அங்கேதான் பழக்கமா?: அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆடை வடிவமைத்து கொடுத்தது ஜாய் கிரிஸில்டா எனவும்; இரண்டு பேருக்கும் அங்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது என்றும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாட்களிலேயே கோவையில் நடந்த விழா ஒன்றில் ஸ்ருதியுடன் அவர் கலந்துகொண்டது இந்த விவகாரத்தை மேலும் எரிய வைத்தது.

புகார் அளித்த ஜாய்: அனைத்துக்கும் உச்சக்கட்டமாக சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த ஜாய் கிரிஸில்டா, ' மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை' என்று குறிப்பிட்டார். மேலும் தன்னிடம் ரங்கராஜ் அன்போடு நடந்துகொண்ட புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டார். அவை பரபரப்பை கூட்டின.

விருந்தில் இருக்கும் ரங்கராஜ்: நேற்றுகூட ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டியாரை அட்டாக் செய்து போஸ்ட் போட்டிருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதாவது ஒரு பெரிய வீட்டு திருமணத்தில் தன்னுடைய சமையல் டீமோடு களமிறங்கி பல வித உணவுகளை சமைத்து அசத்தியிருக்கிறார். மேலும் அங்கு வந்தவர்களுன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்களோ குரேஷி கிண்டல் செய்கிறார், ஜாய் கிரிஸில்டா அட்டாக் செய்கிறார் இப்படி ஒருபக்கம் தன்னை சுற்றி எந்த விஷயம் நடந்தாலும் எதற்கும் ரங்கராஜ் சளைப்பதே இல்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X