»   »  என் கணவர் நண்பர்களின் கட்டாயத்தால் மது குடித்தார்: கலாபவன் மணியின் மனைவி புகார்

என் கணவர் நண்பர்களின் கட்டாயத்தால் மது குடித்தார்: கலாபவன் மணியின் மனைவி புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனது கணவரை சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்ததாக நடிகர் கலாபவன் மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.

நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனையால் கடந்த 6ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மணி அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரகசிய விசாரணை

ரகசிய விசாரணை

மணியை யாராவது திட்டமிட்டே கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீசார் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் 4 பேரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிம்மி மணி

நிம்மி மணி

என் கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக எனக்கு தெரியவில்லை. அவர் பீர் மட்டும் தான் குடிப்பார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. சில நண்பர்களின் கட்டாயத்தால் மது அருந்தி வந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என மணியின் மனைவி நிம்மி தெரிவித்துள்ளார்.

சாராயம்

சாராயம்

நான் மணியின் நண்பர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மது அளித்தேன். அப்போது மணி அதை குடிக்கவில்லை. மீதமுள்ள மதுவை நான் எடுத்துச் சென்றேன். நான் படிக்க உதவியவர் மணி. பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் மது அளித்தேன். பிப்ரவரி 15ம் தேதி நான் அபுதாபிக்கு சென்றுவிட்டேன். மணிக்கு யார் மது அளித்தார்கள் என எனக்கு தெரியாது என அவரின் நண்பர் ஜோமோன் கூறியுள்ளார்.

மணி

மணி

நான் மணி மது அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் அவரை சந்தித்தேன். படம் குறித்து பேச அங்கு சென்றேன். அவருடன் சில நண்பர்கள் இருந்தனர். அவர் பீர் மட்டும் தான் குடித்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என நடிகரும், மணியின் நண்பருமான ஜாபர் இடுக்கி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை

தற்கொலை

மணியின் மரணத்தை தற்கொலை போன்று தெரிய முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பூர்வமாக போராடுவோம். அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவருக்கு குடும்ப பிரச்சனை எதுவும் இல்லை. அது விஷ சாராயம் என்றால் மணிக்கு மட்டும் எப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? அவரை பலர் பணத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.

English summary
Kalabhavan Mani's wife Nimmi said that her husband used to have liquor out of pressure from some friends.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil