»   »  பேஸ்புக்கில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்துள்ள டாப் பிரபலங்கள் யார் தெரியுமா?

பேஸ்புக்கில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்துள்ள டாப் பிரபலங்கள் யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரசிகர்கள், தங்களது அபிமான பிரபலங்களுடன் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்பில் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிகமானோரால் ஃபாலோ செய்யப்படும் டாப் இந்தியப் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய தேதியில் டாப் இடங்களைப் பிடித்திருக்கும் இந்தியப் பிரபலங்களைப் பார்க்கலாம்.

42.4 மில்லியன் ஃபாலோயர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இருக்கிறார்.

8. அமிதாப் பச்சன் :

8. அமிதாப் பச்சன் :

ட்விட்டரில் 29 ஃபாலோயர்களைக் கடந்திருக்கும் 'பிக் பி' அமிதாப் பச்சனை ஃபேஸ்புக்கில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 27 மில்லியன்.

7. சச்சின் டெண்டுல்கர் :

7. சச்சின் டெண்டுல்கர் :

இந்திய கிரிக்கெட் கடவுள் எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கரை ஃபேஸ்புக்கில் 28.2 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

6. யோ யோ ஹனி சிங் :

6. யோ யோ ஹனி சிங் :

யோ யோ ஹனி சிங் எனும் ஹிர்தேஷ் சிங் இந்தியாவின் டாப் பாப் சிங்கர். இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 29.1 மில்லியன்.

5. பிரியங்கா சோப்ரா :

5. பிரியங்கா சோப்ரா :

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்களைப் போலவே ஃபேஸ்புக் ஃபாலோயர்களும் அதிகம். அவரை 32.1 மில்லியன்
பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

4. தீபிகா படுகோனே :

4. தீபிகா படுகோனே :

பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனேவை 33.9 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

3. சல்மான் கான் :

3. சல்மான் கான் :

பாலிவுட்டில் 'சல்லுபாய்' எனச் செல்லமாக அழைக்கப்படும் சல்மான் கானை 35.1 மில்லியன் நபர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

2. விராட் கோஹ்லி :

2. விராட் கோஹ்லி :

பல சாதனைகளைத் தகர்த்து எறிந்துவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு 35.6 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

1. நரேந்திர மோடி :

1. நரேந்திர மோடி :

ஃபேஸ்புக் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் பிரதமர் மோடியை 42.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

English summary
Prime Minister Narendra Modi has topped in the list of most following celebrities in Facebook. In the second place is Indian cricket captain Virat Kohli.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil