யார் அந்த ஜெயிலர்? அப்போ, ரஜினிகாந்த் இல்லையா? வெளியான பரபர அப்டேட்!
சென்னை : ரஜினி அடுத்தபடியாக நடிக்கும் தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நாள் முழுவதும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
ரஜினியின் அடுத்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை அது பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. படத்தில் நடிப்பவர்கள், ஷுட்டிங் பற்றி எந்த அப்டேட்டையும் சன் பிக்சர்ஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தலைவர் 169 டைட்டில் ஜெயிலர்
இந்நிலையில் நேற்று ஹாட் அப்டேட்டாக தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ரத்தக்கரையுடன், தலை கீழாக தொங்கும் பெரிய வெட்டுக் கத்தியுடனான போஸ்டருடன் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், தொடர்ந்து ஆழுதங்கள், ரத்தக்கரை என்றே டாப் ஹீரோக்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருவது விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இது தான் படத்தின் கதை
சிறைக்களம் மற்றும் சிறைக் கதைகளை மையமாகக் கொண்டது தான் தலைவர் 169 படத்தின் கதை, இதற்கு ஜெயிலர் என்று தான் பெயர் வைக்க போகிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளியானது. அவை உண்மை தான் என நேற்று வெளியிடப்பட்ட டைட்டில் உறுதி செய்துள்ளது. இதனால் இந்த படத்தில் யார் ஜெயிலர் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

யார் அந்த ஜெயிலர்
லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின்படி, மாஸ்டர் படத்தை போல் ஜெயிலர் கதையும் சிறையில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டதாம். சிவராஜ்குமார் தான் ஜெயிலர் கேரக்டரில் நடிக்கிறார் என்றும், கிரிமினல் ரோலில் தான் ரஜினி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலால் டென்ஷனான ரசிகர்கள், அப்படியானால் சிவராஜ்குமார் தான் படத்தில் மையப்படுத்தப்படுவார். ரஜினியை சாதாரண ரோலில் நடிக்க வைக்க நெல்சன் விரும்ப மாட்டார் என கூறுகிறார்கள்.

இந்த ரோலில் நடிக்கிறாரா ரஜினி
அதே சமயம் மற்றொரு தகவலாக, ஏகே 61 படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதை போல் ஜெயிலர் படத்தில் ரஜினி நெகடிவ் ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ரஜினி நீண்ட இடைவேளைக்கு பிறகு நெகடிவ் ரோலில் நடித்தால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப் பெரிய ட்ரீட்டாக அமையும் என கூறப்படுகிறது.

குட்டி தலைவர் ஆக போகிறாரா
இந்த படத்தில் ரஜினியின் பிளாஷ்பேக் சீனில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், ரஜினியின் சிறு வயது கேரக்டராக தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனை குட்டி பவானி என அனைவரும் அழைப்பதை போல் ஜெயிலர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை சின்ன தலைவர் என்று அனைவரும் கூப்பிடுவார்கள் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











