twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஏன் அரசியலுக்கு வந்தேன், என் பின்னால் இருப்பவர் யார்?: விஷால் பேட்டி

    By Siva
    |

    Recommended Video

    நான் ஏன் அரசியலுக்கு வந்தேன், என் பின்னால் இருப்பவர் யார்?: விஷால் பேட்டி- வீடியோ

    சென்னை: அரசியலில் குதித்துள்ள தன் பின்னால் இருப்பது யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஷால்.

    உலக நாயகன் கமல் ஹாஸனின் கட்சி சார்பில் நடிகர் விஷால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    மக்கள்

    மக்கள்

    ஆர்.கே. நகர் மக்களுக்கு தேவையான எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. நமக்கு ஒன்றுமே செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் மக்களிடம் உள்ளது.

    வெற்றி

    வெற்றி

    ஆர்.கே. நகரில் விஷால் வெற்றி அடைந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று அத்தொகுதி மக்கள் நம்புகிறார்கள். எனக்கு பின்னால் யாரும் இல்லை. மக்களுக்காக நானாக எடுத்த முடிவு இது.

    குடிமகன்

    குடிமகன்

    நான் அரசியல்வாதி அல்ல, ஒரு இந்திய குடிமகன். அதை அடையாளப்படுத்தவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் அல்ல, எதிரியும் அல்ல.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    எனக்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இது அமையும். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறேன் என்றார் விஷால்.

    தேர்தல் களம்

    தேர்தல் களம்

    விஷால் திடீர் என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காரணம் உள்ளது. அவராக போட்டியிடவில்லை அவரை களத்தில் இறக்கிவிட்டவர் அதிகாரம் படைத்த ஒருவர் என்று பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Vishal who is contesting in the upcoming RK Nagar bypoll said that no one is responsible for his sudden decision. He has decided to contest in this election as people have faith in him, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X