»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்னு தெரிஞ்சிருச்சு, ஆனால் பல்லாள தேவன் பொண்டாட்டி யாருய்யா?

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்னார்னு தெரிஞ்சிருச்சு, ஆனால் பல்லாள தேவன் பொண்டாட்டி யாருய்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தை பார்த்த பிறகு கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று ரசிகர்கள் கேட்டார்கள். பாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் பல்லாள தேவனின் மனைவி யார் என்று கேட்கிறார்கள்.

பாகுபலி படத்தை பார்த்த ரசிகர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்று இரண்டு ஆண்டுகளாக கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பாகுபலி 2 படத்தில் பதில் கிடைத்துவிட்டது.


பாகுபலி 2 படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தற்போது வேறு ஒரு கேள்வியை கேட்டுள்ளனர்.


 பல்லாள தேவன்

பல்லாள தேவன்

பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை ராஜமவுலி காட்டியிருப்பார். ஆனால் அந்த படத்தில் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை.


 பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்திலும் பல்லாள தேவனாக நடித்த ராணாவின் மனைவி யார் என்பதை ராஜமவுலி தெரிவிக்கவில்லை. இதனால் படத்தை பார்த்த ரசிகர்கள் பல்லாள தேவன் பொண்டாட்டி யாருப்பா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


ராஜமவுலி

ராஜமவுலி

பல்லாள தேவனின் காதலை தேவசேனா ஏற்கவில்லை. தேவசேனா அமரேந்திர பாகுபலியை மணந்ததால் பல்லாள தேவன் மனமுடைந்து போகிறார். அவரால் தேவசேனாவை மறக்க முடியவில்லை என்று ராஜமவுலி விளக்கம் அளித்துள்ளார்.


மகன்

மகன்

தேவசேனாவை மறக்க முடியாமல் தவித்த பல்லாள தேவன் திருமணமே செய்யவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக அவர் பத்ராவை தத்தெடுத்துக் கொள்கிறார் என்கிறார் ராஜமவுலி.


English summary
Fans who have watched Baahubali 2 are asking one question and that is 'Who is Bhallaladeva’s Wife?'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil