»   »  பல்லாள தேவனின் பொண்டாட்டி யாருன்னு தெரியுமா?: ராஜமவுலி விளக்கம்

பல்லாள தேவனின் பொண்டாட்டி யாருன்னு தெரியுமா?: ராஜமவுலி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு இயக்குனர் ராஜமவுலி பதில் அளித்துள்ளார்.

பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர். அந்த கேள்வி இவ்வளவு பிரபலமாகும் என்று படக்குழுவே எதிர்பார்க்கவில்லை.


இந்நிலையில் அந்த கேள்விக்கு பாகுபலி 2 படத்தில் பதில் கிடைத்துவிட்டது.


பல்லாள தேவன்

பல்லாள தேவன்

பாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை ராஜமவுலி காட்டியிருப்பார். ஆனால் அந்த படத்தில் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை. இரண்டாம் பாகத்திலும் ராணாவின் மனைவியை காட்டவில்லை.


மனைவி

மனைவி

பாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் பல்லாள தேவனின் பொண்டாட்டி யாருப்பா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவாவது ராஜமவுலி மூன்றாம் பாகத்தை எடுக்கலாமே என்ற பேச்சு கிளம்பியது.


ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி படம் முடிந்துவிட்டது. மூன்றாம் பாகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.


தத்துப் பையன்

தத்துப் பையன்

தேவசேனாவை காதலித்தார் பல்லாள தேவன். அவர் காதலை தேவசேனா ஏற்கவில்லை. ஆனால் பல்லாள தேவனால் தேவசேனாவை மறக்க முடியாததால் யாரையும் திருமணம் செய்யவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக ஆண் குழந்தையை தத்தெடுத்தார் என்று ராஜமவுலி விளக்கம் அளித்துள்ளார்.


English summary
Baahubali director Rajamouli has answered the question, who is Bhallaladeva’s wife?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil