»   »  கடவுள்-னா யாரு சார்... ‘அன்பே சிவம்’ தரும் விளக்கத்தைக் கேளுங்களேன் பாஸ்!

கடவுள்-னா யாரு சார்... ‘அன்பே சிவம்’ தரும் விளக்கத்தைக் கேளுங்களேன் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் பகுத்தறிவுப் பேச்சும், அதனால் உருவாகும் சர்ச்சைகளும் எப்பவுமே சேர்ந்தே வருவது தான்.

கடந்த சனிக்கிழமையன்று தன் 61வது பிறந்தநாளைக் கொண்டாடிய கமல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ரசிகர்கள் தனக்களித்த வெள்ளி கடவுள் சிலையால் பலனில்லை, கடவுள் என் கண் முன்னே வந்தால் கை குலுக்குவேன், பிறகு கேள்வி கேட்பேன் எனக் கூறியிருந்தார்.

இதற்கு இந்து முன்னணி அமைப்புத் தலைவர் ராம கோபாலன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது ஒரு புறம் கிடைக்க, வெறும் வாயை மெல்லும் நெட்டிசன்கள் அவல் கிடைத்தால் விடுவார்களா, இதோ மீம்ஸ் தயாரித்து விட்டார்கள். கமலின் காரசார பேச்சின் ஊடே, மழையும் சேர்ந்தது இவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்க வேண்டும்.

இதோ, கருத்து கந்தசாமிகளாக மாறி இந்த மீம்ஸ்-ஐ உருவாக்கியுள்ளனர். இது அன்பே சிவம் படத்தில் வரும் கமல், மாதவன் பேசும் காட்சியாகும்.

Well said

Posted by Ennama Ippadi Panreengale Ma on Sunday, November 8, 2015
English summary
A meme comparing actor Kamal with rain for asking questions about God is now viral in social networking website.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil