»   »  பிக் பாஸ் 2 அப்டேட்: சிங்கமா, ஹேன்ட்சமா?

பிக் பாஸ் 2 அப்டேட்: சிங்கமா, ஹேன்ட்சமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக்பாஸ் 2 விரைவில்..!!

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போவது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கும், கமலுக்கும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

பிக் பாஸ் டைட்டிலை ஆரவ் வென்றார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார்.

அடுத்த சீசன்

அடுத்த சீசன்

பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊற்றியபோதும் அதை நேரம் தவறாமல் பார்த்து ஹிட்டாக்கிவிட்டனர் தமிழக ரசிகர்கள். இதனால் அடுத்த சீசனை எடுக்க தயாராகிவிட்டார்கள்.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

கமல் ஹாஸன் அரசியல்வாதியாகிவிட்டார். அதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சாத்தியம் இல்லை. இதனால் சூர்யா அல்லது அரவிந்த்சாமி பிக் பாஸை தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

யாருக்கு?

யாருக்கு?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு பெரும்பாலும் அரவிந்த்சாமிக்கே செல்லும் என்று கூறப்படுகிறது. உண்மை தெரிய வேண்டுமானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

டிடி

டிடி

விஜய் டிவி மூலம் பிரபலமான நிகிழ்ச்சி தொகுப்பாளினி டிடியை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதல் சீசனிலேயே அடுத்த சீசனில் கலந்து கொள்ள சில பிரபலங்கள் விருப்பம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that either Suriya or Arvind Swami may host the second season of TV reality show Bigg Boss. Arvind Swami is reportedly having bright chance to host the show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil