»   »  அஜீத், விஜய், ஜெயம் ரவி - 2015ன் மனங்கவர்ந்த நடிகர் யார்?

அஜீத், விஜய், ஜெயம் ரவி - 2015ன் மனங்கவர்ந்த நடிகர் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு மக்களின் மனங்கவர்ந்த நடிகர் யார்? என்று பிரபல தனியார் செய்தி சேனல்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருக்கிறார் அஜீத்.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர், நடிகையர் யார்? என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Who is Most Favorite Actor 2015

அதே போல இந்த வருடமும் மக்களின் மனதைக் கவர்ந்த நடிகர் யார் என்று பிரபலமான 2 தனியார் செய்தி சேனல்கள் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்தினர்.

இந்த கருத்துக் கணிப்பில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கிடையே கடும்போட்டி நிலவியது. மேலும் இந்த ஆண்டின் ஹாட்ரிக் நாயகன் ஜெயம் ரவிக்கும் மக்கள் அதிக வாக்குகளை அளித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியான கருத்துக் கணிப்புகளின் முடிவில் நடிகர் அஜீத் இந்த ஆண்டின் மனங்கவர்ந்த நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இந்த ஆண்டில் வெளியான என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய 2 படங்களிலும் அஜீத் நடிப்பில் அசத்தியிருந்ததே இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த ஆண்டின் சிறந்த பாடலாக வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

English summary
2015: In Tamil cinema Ajith is Selected at the most Favorite Actor in this Year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil