»   »  "சின்ன தல"... சிம்பு- விஜய் சேதுபதி ரசிகர்களிடையே ஒரு முட்டல்.. சிறு மோதல்!

"சின்ன தல"... சிம்பு- விஜய் சேதுபதி ரசிகர்களிடையே ஒரு முட்டல்.. சிறு மோதல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியை வாழ்த்தி சின்ன தல என்று அவரது ரசிகர்கள் பேனர்கள் வைத்திருப்பது கோலிவுட்டில் புது பஞ்சாயத்தைக் கிளப்பியிருக்கிறது.

நடிகர் சிம்பு தல அஜீத்தின் தீவிர ரசிகர் என்பதால் அவரை அவரது ரசிகர்கள் சின்ன தல என்று அழைத்து வந்தனர். மேலும் சிம்புவும் இதனை அவ்வப்போது தல போல கெட்டப் மாற்றி நிரூபித்து வந்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சேதுபதி திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த ரசிகர்கள் அவரை சின்ன தல என்று வாழ்த்தி இருந்தனர்.

Who is Next Thala Simbu or Vijay Sethupathi

அதாவது அஜீத் போன்றே விஜய் சேதுபதியும் எந்த பின்னணியும் இன்றி சினிமாவிற்கு வந்ததால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை சின்னதல என்று குறிப்பிட்டு பேனர், கட் அவுட்களை வைத்து வாழ்த்தியிருக்கின்றனர்.

இதனால் சிம்பு ரசிகர்கள் கோபம் கொள்ள தற்போது கோலிவுட்டில் சின்ன தல யாரு? என்று ஒரு புது பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.

முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு பஞ்சாயத்து கிளம்பி தற்போது வரை அதற்கான தீர்வு கண்டுபிடிக்கப் படாமலே இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த தல-தளபதி என்று புது பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி தற்போது மக்கள் செல்வன் என்ற பட்டத்தை விஜய் சேதுபதிக்கு வழங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

English summary
Who is Next Thala Simbu or Vijay Sethupathi? Now Fans Called Vijay Sethupathi is Next Chinna Thala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil