சன்னி லியோனுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? வேறு யாரு அவர்தான்..

பிரபல நடிகை சன்னி லியோன் பாலிவுட் தாண்டி தற்போது தமிழ் படங்களிலும் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

தமிழில் ஏற்கெனவே வடகறி படத்தில் நடித்தவர் தற்போது ஓ மை கோஸ்ட், தீ இவன் படத்தில் நடித்து வருகிறார்.

நேற்று இந்தப்பட விழாவில் கலந்துக்கொண்ட அவர் தனக்கு பிடித்த நடிகர் யார் என்று கூறியுள்ளார்.

கனடா நாட்டில் பிறந்த சன்னி லியோன்

கனடா நாட்டில் பிறந்த சன்னி லியோன்

1981 ஆம் ஆண்டு கனடா நாட்டில் பிறந்தவர் சன்னி லியோன். தற்போது 41 வயது ஆகிறது. கரெஞ்சித் கவுர் வோரா என்கிற பெயர் கொண்ட இவர், பஞ்சாபி தாய் தந்தைக்கு பிறந்தவர், அவர்கள் கனடாவில் வசித்து வந்ததால், கனடாவில் பிறந்தார். பிறந்தது கனடா என்பதால் கனடா குடியுரிமை பெற்றவர். கனடாவில் திரைப்பட நடிகை, தொழிலதிபராக இருந்துள்ளார். ஆனால் இவர் அதிகமாக உலக அளவில் பிரபலமானது பார் வகைப் படங்கள் மூலமாகத்தான்.

வறுமை காரணமாக மாடலிங்..பின் பார்ன் படங்கள்

வறுமை காரணமாக மாடலிங்..பின் பார்ன் படங்கள்

ஆரம்ப காலத்தில் குடும்ப வறுமை காரணமாக மாடலிங் தொழிலுக்கு வந்த அவர் முதல் மாடலிங் ஷூட் உள்ளாடைகள் சம்பந்தப்பட்ட விளம்பரம். அதன் பின்னர் பார்ன் படங்களில் வாய்ப்பு கிடைக்க அதிக பணம் கிடைத்ததால் அதில் நடிக்க ஆரம்பித்தார். இது அவரது பெற்றோருக்கு தெரியாது. ஒரு கட்டத்தில் கனடாவின் பிரபல பார்ன் இதழான பெண்ட் ஹவுஸ் அட்டைப்படத்தில் அவரது ஆபாச புகைப்படம் வெளியாக பெரும்புகழ் கிடைத்தது. ரசிகர் கூட்டம் பெருகியது. மறுபுறம் சீக்கிய மதத்தினை இழிவு படுத்தியதாக இவர்மீது விமர்சனம் எழுந்தது. சன்னி லியோன் என்றால் பார்ன் ஸ்டார் என உலகப்புகழ் பெற்றார்.

2012-ல் இந்திய படங்களில் கால் பதித்த சன்னிலியோன்

2012-ல் இந்திய படங்களில் கால் பதித்த சன்னிலியோன்

இந்தியாவில் பாலிவுட்டில் 2012-ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் - 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக சன்னிலியோன் அறிமுகமானார். சன்னிலியோன் ஆபாச படங்களில் நடித்தவர் என்பதால் அவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என அப்போது எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த சன்னிலியோன் தமிழில் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வடகறி படத்தில் கேமியோ ரோல் செய்ததன் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார்.

ஐந்தரைக்கோடி பேர் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும்

ஐந்தரைக்கோடி பேர் இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும்

நெகட்டிவ் விமர்சனம் என்றாலும் அதுவும் புகழ் தான். என்பது தற்காலத்தில் நடைமுறையாகி போனது. அதனால் சன்னி லியோன் போன்றவர்களுக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ட்விட்டர் பக்கத்தை 6.5 மில்லியன் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். அவரது இன்ஸ்டா பக்கத்தை 54.3 மில்லியன் பேர் ஃபாலோ பண்ணுகிறார்கள். அந்தளவுக்கு புகழ்பெற்ற சன்னிலியோன் பார்வை தெனிந்தியாவின் கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.

சன்னி லியோனுக்கு பிடித்த நடிகர் வேறு யாரு நீங்கள் நினைக்கும் அவர்தான்

சன்னி லியோனுக்கு பிடித்த நடிகர் வேறு யாரு நீங்கள் நினைக்கும் அவர்தான்

ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதில் ஜி.பி.முத்துவும் நடித்துள்ளார். இந்தப்படத்தின் விழா சென்னையில் நடந்தபோது சன்னி லியோன் பட்டுப்புடவையில் விழாவில் கலந்துக்கொண்டார். அடுத்து அவர் தீ இவன் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்த விழாவுக்காக சென்னை வந்த அவர் விழா மேடையில் பேசும்போது பல விஷயங்களை பேசினார்."நான் எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறேன். அதனால் திரைப்படங்கள் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது பொழுதுபோக்கு அம்சமுள்ள படங்கள் பார்ப்பதுண்டு. ஆனால் அது இந்த மொழிதான் என்று இல்லை. கலைக்கு மொழி இல்லை. தமிழில் எந்த நடிகரை பிடிக்கும் ?என்று கேட்கிறீங்கள். இதுக்கு பதில் சொல்வது ரொம்ப கஷ்டம். சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு பிடித்த ஹீரோ" என்று பேசினார்.ரஜினிகாந்தை நேற்று பிறந்த குழந்தைக்கூட பிடிக்கும். சன்னி லியோனுக்கு பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X