»   »  தெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா?

தெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெறி படத்தில் நடித்த நைனிகாவை பொறுத்த வரை யார் சூப்பர் ஸ்டார் என்பது தெரிய வந்துள்ளது.

மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதில் இருந்து நைனிகாவை ரசிகர்கள் அனைவரும் தெறி பேபி என்று தான் அழைக்கிறார்கள்.

முதல் படத்திலேயே நைனிகா தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். யார் மகளாக்கும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல காலம் ஹீரோயினாக நடித்த மீனா மகளாச்சே.

மீனா

மீனா

மீனா மலையாள படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து நடித்து வந்தாலும் குடும்பம் தான் முக்கியம் என்கிறார் மீனா.

நைனிகா

நைனிகா

என் மகளுக்கு நான் நடிகை என்பது தெரிய வந்ததும் என் அம்மா சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தெறி படத்தில் நடித்த பிறகு நைனிகா ஒரு சூப்பர் ஸ்டார் என்று அவளையே சொல்லிக் கொள்கிறாள் என்று மீனா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு பெரிய கோதாவே நடந்து கொண்டிருக்கும் போது நைனிகா தன்னையே சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளாது. நீ சொல்லிக்கடா பேபி என்கிறார்கள்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

மீனா ரஜினி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார். நைனிகாவும் வளர்ந்து விஜய்க்கு ஜோடியானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    English summary
    Actress Meena said that Theri baby Nainika calls herself a superstar.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil