»   »  சிவகார்த்திகேயனை மிரட்டியது யார்?

சிவகார்த்திகேயனை மிரட்டியது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று நடந்த ரெமோ சக்சஸ் மீட்டில் தங்களை சிலர் படம் பண்ண விடாமல் தடுப்பதாக சொல்லி அழுதுவிட்டார் சிவகார்த்திகேயன். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுபற்றி விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.

சிவகார்த்திகேயனின் ஆரம்ப கட்டத்தில் அவரது படங்களுக்கு ரெகுலராக ஃபைனான்ஸ் செய்ததோடு அந்த படங்களை வாங்கி வெளியிட்டும் கொடுத்த தயாரிப்பாளரைத்தான் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

Who is threatening Sivakarthikeyan?

மாயமான தயாரிப்பாளரின் பெயரை கொண்ட அவர்தான் சிவாவை அதிகமாக புரமோட் செய்தவர். காக்கிச்சட்டை படம் வரையில் சிவாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் வாங்கி விட்டாராம்.

சிவகார்த்திகேயன் சம்பளத்தை ஏற்றியதோடு சொந்த படமும் நடிக்க ஆரம்பித்ததால் அந்த தயாரிப்பாளரை மதிக்கவில்லையாம். இதுதான் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்தாக சென்றிருக்கிறது.

இதுதான் சிவகார்த்திகேயன் அழுகை டிராமாவுக்கு காரணம் என்கிறார்கள்.

English summary
Who is threatening Sivakarthikeyan? Here is a story behind Sivakarthikeyan's tear in Remo success meet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos