»   »  'விசுவாசம்' ஹீரோயின் யார்?

'விசுவாசம்' ஹீரோயின் யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

அஜித் ஜோடியாக நடிக்க மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கீர்த்தி சுரேஷுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், அஜித்தின் 58-வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க சிவா இயக்கத்தில் உருவாகிறது எனும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

விசுவாசம்

விசுவாசம்

விவேகம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால், அடுத்த படத்தில் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கக்கூடாது என ரசிகர்கள் விரும்பினர். ஆனால், மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிப்பதால் அதே கூட்டணி தொடர்கிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கு 'விசுவாசம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விசுவாசம் கதை

விசுவாசம் கதை

'விசுவாசம்' என்ற தலைப்பை கருத்தில் கொண்டு இந்த படமும் சென்டிமென்ட் கதையில் தான் உருவாகும் என்று கணிப்புகள் எழுந்துள்ளன. அஜித் யாரோ ஒருவருக்கு விசுவாசமான நண்பனாக இருப்பார். அவருக்கு துரோகம் செய்யும் சிலரை அழிப்பதுதான் இந்தப் படத்தின் கதையாக இருக்கக்கூடும். முந்தைய படங்களில் தவற விட்டதை இந்தப் படத்தின் மூலம் மீட்டு சிவா, அஜித்துக்கு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா?

யுவன் ஷங்கர் ராஜா?

வரும் ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக செய்திகள் வெளியானபோதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 'வீரம்', 'விவேகம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்தப் படத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. 'பில்லா', 'மங்காத்தா' உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் செம கூட்டணி அமைத்த யுவன் இந்தப் படத்தில் இணைந்தால் ரசிகர்களும் ஹேப்பிதான்.

ஹீரோயின் யார்?

ஹீரோயின் யார்?

விஸ்வாசம் ஃபேமிலி செண்டிமென்ட் கதையில் உருவாகும் நிலையில், ஹீரோயினாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட சில நடிகைகளும் நாயகி பட்டியலில் இருக்கிறார்களாம். ஆனாலும், கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முதலிடம் என படக்குழு வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் சிவா தனது ஒவ்வொரு படத்திலும் புதிய ஹீரோயின்களையே கமிட் செய்து வருகிறார். அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். 'வேதாளம்' படத்தில் ஸ்ருதி ஹாசனை தேர்ந்தெடுத்தார். 'விவேகம்' படத்தில் காஜல் அகர்வால் அஜித் ஜோடியாக நடித்தார். எனவே, 'விசுவாசம்' படத்தில் தமன்னாவுக்கும் வாய்ப்பு குறைவு. அனுஷ்கா தற்போது தெலுங்கில் பிஸியாக இருப்பதால் கீர்த்தி சுரேஷுக்கே அதிர்ஷ்டம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ajith's 58th film will be directed by siva, Satyajyothi Films was producing this film. The film is titled 'Loyalty'. Keerthi Suresh will may acted as the heroine in Ajith's 'Vivegam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil