Don't Miss!
- Automobiles
போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- News
கொரோனா பாதிப்பில் இருந்து.. இந்திய பொருளாதாரம் மிக விரைவாக மீண்டுவிட்டது- பொருளாதார ஆய்வறிக்கை
- Finance
ரூபாய் மதிப்பு சரிய வாய்ப்பு.. பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் அதிர்ச்சி தகவல்..!!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“லீலாவை யார் கொன்றது“..ஆவலை தூண்டும் விஜய் ஆண்டனியின் கொலை!
சென்னை : விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது.
Recommended Video
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார்.
அக்னிச் திறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
காவிய கவிஞர் வாலி நினைவு தினம்...இதெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் அவரை மிஸ் பண்ணுவீங்க

கொலை
விஜய் ஆண்டனி நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் கொலை. இந்த படத்தை விடியும் முன் புகழ் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கொலை படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் திரைப்படமான நைஃப்ஸ் அவுட் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் இருவரும் துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

“லீலாவை யார் கொன்றது“ என்ற கேள்வி
இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. அந்த மோஷன் போஸ்டரில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் இறுதியாக "லீலாவை யார் கொன்றது" என்ற கேள்வியுடன் மோஷன் போஸ்டர் முடிந்தது. ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான புதிய பறவை படத்தில் வரும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலோடு அட்டகாசமாக இருந்தது.

க்ரைம் திரைப்படம்
க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஒரு கொலையை சுற்றி நகரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து லீலாவை யார் கொன்றது என ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.