»   »  2.0 டீசர் லீக்கானது எப்படி?.. வெளியிட்டது யார்?.. பரபர தகவல்கள்!

2.0 டீசர் லீக்கானது எப்படி?.. வெளியிட்டது யார்?.. பரபர தகவல்கள்!

Written By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.0 படத்தின் டீசர் எப்படி வெளியாகி இருக்கும் என்றும் சில தகவல்கள் வந்து இருக்கிறது. இது அந்த படக்குழுவினரை பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஏற்கனவே பலகோடிகள் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பிரச்சனை படத்தின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக்கள் வெளியாகி இருக்கிறது.

காலா டீசர்

காலா டீசர்

இதேபோல் காலா படத்தின் டீசரும் வெளியானது. அந்த படத்தின் டீசர் தள்ளிப் போனதை பயன்படுத்தி யாரோ அதை வெளியிட்டார்கள். இதனால் முறையான அறிவிப்பு இல்லாமல் அந்த பட டீசர் வெளியானது.

அடுத்த படம்

அடுத்த படம்

இந்த நிலையில் அடுத்த ரஜினி படத்தின் டீசரும் தற்போது வெளியாகி இருக்கிறது. காலையில் 2.0 பட டீசர் வெளியானது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோவை நீக்கினார்கள்

வீடியோவை நீக்கினார்கள்

இதுபற்றி உடனே புகார் அளிக்கப்பட்டது. இதனால் உடனடியாக டீசர் நீக்கப்பட்டது. மற்ற தளங்களில் ஏற்றப்பட்ட சில வீடியோக்கள் இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது.

என்ன இருக்கிறது

என்ன இருக்கிறது

இந்த வீடியோவில் முழுமையான வேலைகள் செய்யப்படவில்லை. பல இடங்களில் கிரீன் மேட் அப்படியே இருக்கிறது. படத்திற்காக போடப்பட்ட செட்டுகளும் அப்படியே இருக்கிறது.

யார் செய்து இருப்பார்கள்

யார் செய்து இருப்பார்கள்

தற்போது அந்த படத்தின் எடிட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் இந்த எடிட்டிங் மூலம் தான் வீடியோ வெளியாகி இருக்கிறது. இது எடிட்டிங் கட் என்பதால் அங்குதான் யாரோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

English summary
Rajinikanth's 2.0 teaser leaks in online before the team officially releases the teaser.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil