Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கதிரவனை காதலிப்பது யார்? குயின்ஸியா? ஷிவினா? பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் மீண்டும் ஒரு முக்கோண காதல் கதை உருவாகி உள்ளது யார் யாரை காதலிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதலுக்கு பஞ்சம் இருக்காது. இங்கு இயல்பாகவே காதல் வந்து விடுகிறதா? இல்லை கண்டெண்டுக்காக காதல் ட்ராக் வருகிறதா என தெரியவில்லை.
ஆனால், இந்த சீசனில் நிவாஷினி, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ரச்சித்தா, கதிரவன்,ஷிவின் என ஏகப்பட்ட காதல் கதை உருவாகி உள்ளது.
ராபர்ட் பிக் பாஸ்ல கலந்துக்க நான் தான் காரணம்… ஆனால் என்னைப் பற்றி பேசவே இல்லை: குமுறிய வனிதா

பிக் பாஸ் சீசன்6
பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் இருந்து அசல் கோலாரு வெளியே போனத்திற்கு பிறகு பெரிய ரொமான்ஸ் எதுவும் இல்லாமல் வீடு கலை இழந்துவிட்டது எனலாம், அதேபோல பிக் பாஸ் ரசிகர்களும் மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்ய ஆளும் கிடைக்காமல் தவித்து வந்தனர். தற்போது, நெட்டிசன்களுக்கு கொத்தாக ஒரு முக்கோண காதல் கதை கிடைத்துள்ளது.

ஷிவினுக்கு கிரஷ்
கதிரவன் மீது ஷிவினுக்கு கிரஷ் இருப்பதை கடந்த வாரங்களாக ஜாடைமாடையாக சொல்லி வருகிறார் ஷிவின். இது கதிருக்கு புரிந்தும் புரியாதது போல இருந்து வருகிறார். இது வீட்டில் இருப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியவர ஷிவினை கிண்டிலடித்து வருகின்றனர். இப்படி ஒரு காதல் கதை சென்று கொண்டு இருக்க குயின்ஸி கதிரவனிடம் வழிந்து வழிந்து பேசி வருகிறார்.

அமைதியாக இருக்கும் கதிரவன்
கதிரவன் என்ன நிறத்தில் உடை போடுகிறாரோ அதை நிறத்தில் உடையை போட்டு அவரின் சிம்பாலிக்காக காதலை சொல்லி வருகிறார் குயின்ஸி. இது எல்லாம் தெரிந்தும் கதிரவன் நமக்கு எதுக்குபா வம்பு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிடலாம் என நினைத்து கொண்டு அமைதியாகவே இருக்கிறார்.

யார் யாரை காதலிக்கிறார்கள்
நேற்றைய எபிசோடில் குயின்ஸியும் கதிரவனும் ஒரே நிறத்தில் மஞ்சள் கலரில் டிஷர்ட் போட்டி இருந்தனர். இதைப்பார்த் ஷிவின், என்ன குயின்ஸி அண்ணணும் தங்கச்சியும் ஒரே கலரில் டிரெஸ் போட்டு இருக்கீங்க என்று கிண்டலடித்தார். கதிர் எனக்கு அண்ணனா? ஓ நீ சொல்வது வாங்கோன்னா... போங்கோன்னாவா என இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டனர். இந்த முக்கோண காதல் கதையில் யார் யாரை காதலிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

காதல் மன்னாக கதிரவன்
கதிரவனை ஏற்கனவே செரினா காதலித்ததாக கூறப்பட்டது. இதனால், ரசிகர்கள் அவரை கத்ரினா என சொல்லமாக அழைத்தனர். அதே போல பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மகேஸ்வரியும் தன்னுடைய கிரஷ் கதிரவன் தான் என்றும் கூறியிருந்தார். பிக் பாஸ் இந்த சீசனின் காதல் மன்னாக கதிரவன் இருக்கிறார்.