twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகள் 2020.. சிறந்த இயக்குநர் விருதை வெல்ல யார் தகுதியானவர்.. ஒரு சின்ன அலசல்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: நாளை காலை இந்நேரம் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். சிறந்த படம், சிறந்த நடிகர் யார், சிறந்த இயக்குநர் யார், சிறந்த நடிகை யார் என்பது உட்பட எல்லாவற்றுக்கும் விடை கிடைத்திருக்கும்.

    தற்போது, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை வெல்ல தகுதியான இயக்குநர் யார் என்பது குறித்து இங்கே ஒரு சின்ன அலசல் செய்யப் போகிறோம்.

    மார்டின் ஸ்கார்சஸி, குவென்டின் டரன்டினோ, சாம் மெண்டிஸ், டோட் பிலிப்ஸ் மற்றும் பாங் ஜூன் ஹோ உள்ளிட்ட இயக்குநர்களில் யாருக்கு ஆஸ்கர் கிடைக்கும் யார் தகுதியானவர் என்பதை பார்ப்போம்.

    ஜோக்கர் இயக்குநர்

    ஜோக்கர் இயக்குநர்

    ட்யூ டேட், ஹேங் ஓவர், வார் டாக்ஸ் உள்ளிட்ட பக்காவான காமெடி படங்களை இயக்கி வந்த டோட் பிலிப்ஸா இப்படி ஒரு படத்தை இயக்கி உள்ளார் என பலரும் வியக்கும் வண்ணம் ஜோக்கர் படத்தை இயக்கி உள்ளார். இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது ஜோக்வின் பீனிக்ஸுக்கு கிடைக்கும் என பலரும் கணித்து வரும் நிலையில், அதற்கு காரணமான டோட் பிலிப்ஸும் ஆஸ்கர் விருதை வெல்ல தகுதியானவர் தான்.

    தி ஐரிஷ்மேன் இயக்குநர்

    தி ஐரிஷ்மேன் இயக்குநர்

    டேக்ஸி டிரைவர், தி டிபார்டட், தி உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பல விருது படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி, தனது 77வது வயதிலும் ஆஸ்கர் போட்டியில் களம் காண்கிறார். ராபர்ட் டி நிரோ, அல் பசினோ, ஜோ பெஸ்சி என மூன்று பெரிய நடிப்பு அரக்கர்களை வைத்து ஸ்கார்சஸி இயக்கியுள்ள ஐரிஷ்மேன் பல விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கார்சஸிக்கு எல்லாம் ஆஸ்கர் விருது ஒரு பொருட்டே அல்ல!

    பாராசைட் இயக்குநர்

    பாராசைட் இயக்குநர்

    ஆஸ்கர் விருதுகள் 2020ல் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வெல்லப் போகும் படமாக பாராசைட் முன்னிலையில் இருக்கிறது. கொரிய இயக்குநரான பாங் ஜூன் ஹோ முதன் முறையாக ஆஸ்கர் மேடையை அலங்கரிக்கப் போகிறார். வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் இவருக்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    குவென்டின் டரன்டினோ

    குவென்டின் டரன்டினோ

    இயக்குநர் குவென்டின் டரன்டினோவுக்கு உலகளவில் பல சினிமா பிரபலங்களே ரசிகர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம், ஆஸ்கர் ரேஸில் பல விருதுகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த இயக்குநருக்கான விருதுக்கான போட்டியில், டரன்டினோ முன்னிலையில் உள்ளார்.

    சாம் மெண்டிஸ்

    சாம் மெண்டிஸ்

    சினிமா என்பது ஒருவரை சார்ந்த ஒரு விஷயம் அல்ல, அது பல தனித மனித மூளைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். சிங்கிள் ஷாட் படமாக 1917 படத்தை இயக்க சாம் மெண்டிஸ் போட்டிருக்கும் மெனக்கெடல், கடும் உழைப்பு எல்லாம் கண் இமைக்காமல் படத்தை நாம் திரையில் காணும் போதே தெரிகிறது. நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை சாம் மெண்டிஸ் வெல்வார் என எதிர்பார்க்கிறோம்.

    மேலே குறிப்பிட்டுள்ள 5 ஜாம்பவான்களும், இயக்கத்தில் பலே கில்லாடிகள் தான். ஆஸ்கர் தேர்வுக் குழு யாருக்கு விருதை அளிக்கப் போகிறது என்பதை அந்த பிரம்மாண்ட விழாவில் கண்டு ரசிப்போம்.

    English summary
    It’s a mix of legends and first-time nominees, and the result is that it’s hard to precisely predict who will end up walking away with the trophy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X