»   »  சிவகார்த்திகேயனை மிரட்டி அழ வைத்தது யார்?: நாசர் பரபர பேட்டி

சிவகார்த்திகேயனை மிரட்டி அழ வைத்தது யார்?: நாசர் பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் மேடையில் அழுதது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். தன்னை நிம்மதியாக வேலை பார்க்க விடுமாறு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சிவா

சிவா

சிவகார்த்திகேயன் இப்படி மேடையில் அழுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளரான எஸ்கேப் மதன் புதுப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு முன்பணம் கொடுத்ததாக கூறுகிறார். ஆனால் அதை சிவா மறுக்கிறார்.

பணம்

பணம்

மதன் சிவாவுக்கு பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் அது புதுப்படத்திற்கான முன்பணமா இல்லை வேறு எதற்காவது கொடுக்கப்பட்டதா என்பதை இருவரையும் அழைத்து பேச உள்ளோம்.

விஷால்

விஷால்

விஷாலை சிலர் மிரட்டியதாக அவர் கூறியிருப்பது பழைய கதை. தனிப்பட்ட முறையில் அவரை மிரட்டியதை சிவகார்த்திகேயன் விஷயத்தோடு சேர்த்து கூறியிருக்கிறார்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

படத்தில் பத்து பேரை பந்தாடும் ஹீரோக்களை நிஜத்தில் சிலர் மிரட்டுகிறார்களா என்று கேட்கிறார்கள். ஹீரோக்கள் ஆனாலும் அவர்களும் சாதாரண மனிதர்கள் தானே.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர், நடிகர்கள் இடையே நடக்கும் பணபரிவர்த்தனை, டேட்ஸ் குறித்து நடிகர் சங்கம் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்.

மிரட்டல்

மிரட்டல்

சிவகார்த்திகேயனை போன்று யாரும் அழுவது. விஷாலை போன்று மிரட்டப்பட்ட சம்பவங்கள் இனியும் நடக்காமல் நடிகர் சங்கம் பார்த்துக்கொள்ளும்.

வாராகி

வாராகி

நடிகர் சங்க ஊழல் புகாரில் வாராகி நடிகர் கமல் ஹாஸனின் பெயரை சேர்த்திருப்பது விளம்பரத்திற்காகவே. அவரிடம் ஆதாரங்கள் இருந்தால் அதை மீடியா முன்னிலையில் மக்களிடம் வெளியிட வேண்டியது தானே.

English summary
Nadigar Sangam president Nasser has given explanation about who threatened actor Sivakarthikeyan and made him cry in the Remo success meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil