Don't Miss!
- News
ஜெயலலிதா சொத்துக்கு வந்த புது "பங்குதாரர்!" சென்னை உயர்நீதிமன்றத்தில் "அண்ணன்" மைசூர் வாசுதேவன் மனு
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யார் அந்த கருப்பு ஆடு? சத்தியம் வாங்கியும் கண்டுபிடிக்க முடியலையே.. பிக்பாஸ் தேர்தல் களேபரம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு மாற்றி ஓட்டு போட்ட நபரை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பினர் ஹவுஸ்மேட்ஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்டுகள் 4, 4 பேராக மூன்று கட்சிகளாக பிரிந்தனர்.
சஞ்சீவ், பிரியங்கா மற்றும் சிபி ஆகியோர் தங்களின் கட்சிகளுக்கு தலைவராக இருந்தனர். இதில் சஞ்சீவின் கட்சியும் சிபியின் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தல் பிரச்சராத்தில் ஈடுபட்டுவந்தது.
பெரிய டிவிஸ்ட்டா இருக்கே... இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ள பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்!

என்கேஎம்பி கட்சி வெற்றி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான என்கேஎம்பி கட்சி 7 வாக்குகளையும் பிரியங்காவின் உரக்க சொல் கட்சி 5 வாக்குகளையும் பெற்றது. இதன்மூலம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் என்கேஎம்பி கட்சி வெற்றி பெற்றது.

அந்த ஒரு ஓட்டு யாருடையது?
இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்ததால் ஒரே தலைவராக இமான் அண்ணாச்சி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பிரியங்காவின் உரக்க சொல் கட்சிக்கு போடப்பட்ட அந்த ஒரு வாக்கு யாருடையது என தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

உலக உருண்டையின் மீது சத்தியம்
கூட்டணிக்குள் இருந்தே ஓட்டை மாற்றிப்போட்ட அந்த கருப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்கும் பணியிலும் இறங்கினர் ஹவுஸ்மேட்ஸ். இதற்காக உலக உருண்டையின் மீது கை வைத்து ஹவுஸ்மேட்ஸிடம் சத்தியம் வாங்கினர். எல்லோரும் சத்தியம் செய்ததால் கடைசி வரை யார் ஓட்டை மாற்றி எதிர்க்கட்சிக்கு போட்டார்கள் என்ற உண்மை வெளியாகவில்லை.

கடைசி வரை தெரியவில்லை
இருப்பினும் ராஜுதான் ஓட்டை மாற்றி போட்டிருப்பார் என சந்தேகித்தனர் ஹவுஸ்மேட்ஸ். ஆனால் டைனிங் ஏரியாவில் அமர்ந்து பேசிய ராஜு, யார் அப்படி செய்தது என சஞ்சீவ்வுடன் சீரியஸாக டிஸ்கஸ் செய்ததால் அவர் தானா என்ற குழப்பமும் ஏற்பட்டது. இதனால் யார் ஓட்டை மாற்றி போட்டார்கள் என்ற உண்மை கடைசி வரை தெரியவில்லை.