Don't Miss!
- News
ஜாமியா பல்கலைக்கழக வன்முறை வழக்கு: ஷார்ஜில் இமாமை விடுவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ சூர்யாவா? சிம்புவா? அஜித்தா?...அவரிடமே கேட்போம்
சென்னை : இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார் டைரக்டர் சுதா கொங்கரா. அதிலும் சூரைப்போற்று படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளதால் இப்போது இந்திய சினிமாவின் கவனம் முழுவதும் சுதா கொங்கரா மீது தான் உள்ளது.
சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.
இதற்கிடையில் சூரரைப் போற்று படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்ததால் மீடியாக்கள் பலவும் சுதா கொங்கராவை பேட்டி எடுத்து வருகின்றன. இந்த பேட்டிகளில் பல சுவாரஸ்ய தகவல்களை சுதா கொங்கரா பகிர்ந்து வருகிறார்.
சர்ரு சர்ருன்னு இளநீர் வெட்டும் மாதவன்..மல்டி டாலென்டெட் பர்சன் என்று வர்ணிக்கும் ரசிகர்கள்!

சிம்புவை இயக்க போகிறாரா சுதா கொங்கரா
இந்த சமயத்தில் சுதா கொங்கரா, அடுத்ததாக நடிகர் சிம்புவை இயக்க போகிறார். கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்கப்பட்டு வருவதாக மீடியாக்களில் தகவல் பரவியது. மற்றொரு புறம், சுதா கொங்கரா அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தை இயக்க போகிறார். ஏகே 63 படத்தை தான் சுதா இயக்க போகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

யாரை அடுத்து இயக்க போகிறார்
ஆனால் சுதா கொங்கரா, மீண்டும் சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க போவதாகவும், இதுவும் உண்மை சம்பவ அடிப்படையிலான பயோபிக் படம் தான் என்றொரு தகவலும் பல மாதங்களாக பரவி வருகிறது. இதனால் சுதா கொங்கரா அடுத்து யாரை இயக்க போகிறார். சூர்யா, அஜித், சிம்பு மூவரில் யார் ஹீரோ என்ற குழப்பம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

சூர்யா 43 ஷுட்டிங் எப்போ
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கராவிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர், சிம்புவை இயக்க போவதாக வந்த வதந்திகளை நானும் கேட்டேன். தற்போது சிம்புவுடன் நான் பணியாற்றவில்லை. அடுத்ததாக சூர்யா படத்தை தான் நான் இயக்க போகிறேன். தற்போது நாங்கள் இருவரும் கமிட்டாகி உள்ள படங்களை முடித்த பிறகு தான் சூர்யா 43 வேலைகள் எப்போது துவங்கப்படும் என முடிவு செய்யப்படும் என்றார்.

ஹீரோவிற்காக கதை எழுதுவீங்களா
நீங்கள் கதை தயாரிக்கும் போது ஹீரோவை மனதில் வைத்து, அவருக்கானது என முடிவு செய்து தான் கதை எழுதுவீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் தயக்கமின்றி உடனடியாக பதிலளித்த சுதா கொங்கரா, நான் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. உதாரணமாக சூரரைப் போற்று படத்தில் சூர்யா, புகைபிடிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. ஆனால் நிஜத்தில் சூர்யா புகைபிடிக்க மாட்டார். கெட்ட வார்த்தை பேசுவது போன்ற சீனும் உள்ளது.

அடுத்த பட கதை இதுதான்
கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே சில விஷயங்களை சேர்ப்போம். சண்டைக்கட்சிகளும் கூட தேடைப்பட்டால் தான் சேர்ப்பேன். தென்னிந்தியாவில் உருவான முதல் மூன்று பெண் டாக்டர்களின் கதையை படமாக உருவாக்க போகிறேன். இதுவும் உண்மை சம்பவ அடிப்படையிலானது தான். இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.

அஜித் படம் கன்ஃபார்ம் தானா
அதே சமயம் சமீபத்தில் பிரஷ் மீட் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, அஜித் உடனான படம் பற்றி கேட்டதற்கு நிச்சயம் பண்ணுவோம். ஒவ்வொன்றாக செய்வோம்.ஒரு படத்தை முடிக்க எனக்கு 3 வருடங்கள் தேவைப்படுகிறது. ஒரு படத்தை முடித்த பிறகு தான் மற்றொரு படத்தை துவக்க முடியும் என்றார். இதனால் சுதா கொங்கரா - அஜித் படமும் கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது.