»   »  விஜய் 60... யாருங்க டைரக்டரு?

விஜய் 60... யாருங்க டைரக்டரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் புலி வெளியாகிவிட்டது. அந்தப் படத்தால் விஜய்க்குக் கிடைத்த ஒரே நன்மை அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது மட்டும்தான். இதுவரை அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திராத தோல்வியைத் தந்த படம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது அந்தப் படம்.

அடுத்து வரவிருப்பது அட்லீ இயக்கும் படம். சத்திரியன் படத்தின் ரீமேக் என்கிறார்கள். இந்தப் படமாவது புலியின் சோகத்தைத் துடைக்கக் கூடியதாக வருமா பார்க்கலாம்.

Who will direct Vijay's 60th movie?

அட்லீ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிறது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தி.

இந்தப் படத்தை இயக்குவது எஸ்.ஜே.சூர்யா என்று சிலர் சொல்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டால், 'இப்போதைக்கு இதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது' என மையமாகச் சிரிக்கிறார்!

விசாரித்தால், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க ஒரேநேரத்தில் நான்கு இயக்குநர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கிறார்.

மீதி மூன்றுபேர்? முருகதாஸ், வெங்கட்பிரபு மற்றும் விஜய் மில்டன் ஆகியோராம்.

முருகதாஸ், தமிழ்,தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படம் உறுதியாகிவிட்டது. அதற்கு எப்படியும் ஒரு முழு ஆண்டை அவர் எடுத்துக் கொள்வார்.

மற்ற மூவரும் அடுத்த படத்துக்குத் தயாராக இருப்பவர்கள் என்பதால் இம்மூவரில் யாராவது ஒருவர்தான் விஜய் படத்தை இயக்கக்கூடும் என்கிறார்கள்.

இடையில் பிரபு தேவாவும் விஜய்யும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. விஜய் மார்க்கெட் டல்லடித்தபோது, புயலாய் வந்த போக்கிரிதான் தூக்கி நிறுத்தியது நினைவிருக்கலாம்.

English summary
According to sources there are 3 leading directors, SJ Surya, Vijay Milton, Venkat Prabhu, in consideration to direct Vijay's 60th movie. Meanwhile, sources says that Prabhu Deva also met Vijay and discussed a plot.
Please Wait while comments are loading...