இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் இருந்து வெளியேற போறது இவங்க தானா? அடித்துச் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆரம்பத்தில் இருந்தே போரடிக்காமல் போர்க்களமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சில மிக்சர்கள் நாமினேட் ஆகாமல் நைஸாக தப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்களில் யார் வெளியேறுவார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாமினேட் ஆனதிலேயே இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டிய நபர் இவர் தான் என்றும் கண்டிப்பாக இவர் தான் வெளியேறுவார் என கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் யாரை வெளியே அனுப்ப காத்திருக்கின்றனர் என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்..

எஸ்கேப் ஆனவர்கள்
இந்த வாரம் ஏடிகே, மகேஸ்வரி உள்ளிட்ட போட்டியாளர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். வழக்கம் போல ராபர்ட் மாஸ்டர், ராம் ராமசாமி, நிவாஷினி எல்லாம் இந்த வாரமும் எப்படித்தான் தப்பித்தார்கள் என்றே தெரியாத அளவுக்கு எஸ்கேப் ஆகி விட்டனர். இந்த வாரம் தலைவியாக இல்லாத குயின்ஸி கூட சிக்கவில்லை. ரச்சிதா, மைனா, ஜனனி, அமுதவாணன் எல்லாம் எப்படி நாமினேட் ஆகவில்லை என்கிற ஷாக்கில் இருந்தே இன்னமும் மீளவில்லை.

யாரெல்லாம் சிக்கினாங்க
இந்நிலையில், இந்த வாரம் வழக்கம் போல அதிக ஓட்டுக்களுடன் நம்ம அசீம் அண்ணாச்சி நாமினேட் ஆகி உள்ளார். ஆனால், அவருக்கு எப்படியும் மக்கள் ஓட்டு கிடைத்து விடும் என்பதால் இந்த வாரமும் அவர் தப்பித்து விடுவார். அசீமை தொடர்ந்து அக்கா ஆயிஷா, அவார்டு நடிகை ஷெரினா, எதிலுமே கலந்துக்காத விஜே கதிரவன், எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்கும் விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர்.

ரசிகர்கள் ஷாக்
வழக்கமாக 10 பேர், 8 பேர் என நாமினேட் ஆவார்கள். ஆனால், இந்த வாரம் குறிப்பிட்ட ஒருவரை வீட்டில் இருந்து தூக்கி எறிவதற்காக நாமினேஷனில் வெறும் 5 பேர் மட்டுமே வந்திருப்பதை பார்த்து ரசிகர்களே ஷாக் ஆகிவிட்டனர். கண்டிப்பாக இதில் இருந்து அந்த போட்டியாளர் தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சேவ்
ஆரம்பத்தில் இருந்தே இந்த நாமினேஷன் பட்டியலில் அதிக வாக்குகளை பெற்று விக்ரமன் முதல் இடத்தில் உள்ளார். அசீம் தனலட்சுமிக்கு எதிராக தப்பாக நடந்து கொண்டதை எதிர்த்து கேள்வி கேட்ட விக்ரமனுக்கு மக்கள் அதிகளவில் வாக்குகளை போட்டு முதலில் இந்த வாரம் சேவ் செய்ய உள்ளனர்.

அசீமுக்கு ரசிகர்கள் அதிகம்
இந்த முறையும் நாமினேஷனில் வந்தாலும் அசீம் 2வதாக சேவ் ஆகிடுவார் என்றே தற்போதைய கருத்துக் கணிப்பில் தெரிகிறது. என்ன தான் பிக் பாஸ் விளையாட்டில் முரடனாக தெரிந்தாலும், வீக்கெண்ட் ஆனால், பொட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார் அசீம். அடுத்த பாலாஜி முருகதாஸாகவே அசீம் மாறிவிடுவார் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கடைசி மூவர்
இந்த வாரம் கடைசி 3 பேராக கூப்பில் உட்காரப் போவது இந்த 3 பேர் தான் என இப்போதே கன்ஃபார்ம் ஆகி விட்டது. விஜே கதிரவன், ஷெரினா மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவங்க மூன்று பேரில் மக்கள் அந்த ஒரு போட்டியாளரை தான் வெளியேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிஷா தப்பிப்பாரா
பிக் பாஸ் ஹோஸ்ட்டான கமல்ஹாசனையே போர்ட்ரே பண்ணாதீங்க என திமிராக பேசிய ஆயிஷாவை இந்த வாரம் வெளியே பிக் பாஸ் டீமே அனுப்பி விடுவார்கள் என ஒரு பக்கம் ரசிகர்கள் சொல்லி வந்தாலும், ஆயிஷா அந்த ரீதியில் பேசவில்லை என்றும் அவருக்கு சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த வாரம் ஆயிஷா தப்பிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருத்துக் கணிப்புகள் இப்போது வரை கூறுகின்றன.

ஷெரினா வெளியேறுவார்
கடந்த வாரம் அசல் கோலார் வெளியேறிய நிலையில், இந்த வாரம் டிராமா குயின் ஷெரினா வெளியேறுவார் என்பது உறுதி ஆகி உள்ளது. ஆயிஷாவை மன்னித்தால் கூட மன்னிக்கலாம் ஆனால், ஷெரினாவை மன்னிக்க கூடாது என அவருக்கு ரசிகர்கள் சுத்தமாக ஓட்டே போடவில்லை. ஆயிஷா அல்லது ஷெரினா இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவது உறுதி என்பது மட்டும் தெளிவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











