ஃபினாலே டிக்கெட் யாருக்கு...சோத்தையும் போட்டு சண்டையையும் மூட்டி விட்ட பிக்பாஸ்
சென்னை : பிக்பாசில் தற்போது ஃபினாலே ரேஸ் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளதால் டபுள் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
தற்போது வீட்டிற்குள் உள்ள 8 போட்டியாளர்களில், ஃபினாலே டிக்கெட்டை வென்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார், இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஓப்பன் நாமினேஷன்
நிகழ்ச்சியில் 85 வது நாளான நேற்று, இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடத்தப்பட்டது. ஓப்பன் நாமினேஷன் மூலம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். நிரூப், பாவனி உள்ளிட்டோர் அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். இது நடந்து முடிந்த பிறகு, அனைவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்வதாக பிக்பாஸ் அறிவித்தார்.

டின்னரில் விவாதம்
தொடர்ந்து டின்னர் பார்ட்டியுடன் ஃபினாலே டிக்கெட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஃபினாலே டிக்கெட்டை பெற தகுதியில்லாத ஒருவரை தேர்வு செய்து வெளியேற்ற வேண்டும். வெளியேற்றப்படும் நபருக்கு கருப்பு ரோஜாவை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. சுவையான பிரியாணி, பீசா, ஆப்பிள் ஜுஸ், சிக்கன் என பலவித அயிட்டங்களை வைத்து டின்னரை சாப்பிட்டபடியே விவாதத்தை துவக்குகிறார்கள்.

பிரியங்கா – நிரூப் சண்டை
இதிலும் வழக்கம் போல் நிரூப், பிரியங்கா இடையே கடும் வாக்குவாதம், சண்டை நடக்கிறது. உனக்கு ஃபினாலே டிக்கெட்டை பெற தகுதி இல்லை, நீ கேமிற்கும் உனக்கும் உண்மையாக இல்லை என சிபி, பிரியங்கா ஆகியோர் குற்றம் சொல்ல, அதனால் கடுப்பாகிறார் நிரூப். ஒன்று இவ இருக்கனும் இல்லை நான் இருக்கனும். கதவை திறங்கள் பிக்பாஸ். நான் இப்போதே வெளியே செல்ல தயார் என்கிறார் நிரூப்.

வெளியேற்றப்பட்ட நிரூப்
நீண்ட விவாதத்திற்கு பிறகு அனைவரும் ஒன்று கூடி, பெரும்பாலானவர்களின் கருத்துபடி நிரூப்பிற்கு டிக்கெட்டை பெற தகுதியில்லை என கூறி கருப்பு ரோஜாவை கொடுக்கிறார்கள். பிக்பாசும், இந்த ஃபினாலே டிக்கெட் டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும், மற்றவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என்றும் அறிவிக்கிறார்.
Recommended Video

கலாய்க்கும் நெட்டிசன்கள்
இதை பார்த்த நெட்டிசன்கள், சோத்தையும் போட்டி இப்படி கொளுத்தி போட்டு, சண்டையையும் மூட்டி விட்டீர்களே பிக்பாஸ் என கேட்டு வருகின்றனர். இப்போது தான் வீட்டிற்குள் ஒற்றுமை வந்து, சத்தமில்லாமல் அமைதியாக இருக்கு என நினைத்தோம். அதற்குள் அடுத்த சண்டையை ஆரம்பித்து விட்டீர்களா என கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











