பிரியங்காவை வறுத்தெடுக்கும் கமல்...இன்று யாரை சேவ் செய்ய போகிறார் ?

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய போகிறது. ஆரம்பத்தில் கலகலப்பாக, ஜாலியாக சென்ற இந்த நிகழ்ச்சி, பிறகு போட்டியாளர்களின் கதை கேட்டு கண்ணீர், சென்டிமென்ட்டால் நிறைந்தது.

இந்த கதைகளுக்கு லைக், டிஸ்லைக் கொடுக்க வேண்டும் என பி்க்பாஸ் கூறியதால் மன கசப்புக்கள், சங்கடங்கள் உருவானதுடன், குரூப்களும் உருவாக துவங்கின. தெரியாத முகங்கள் போட்டியாளர்களாக களம் இறங்கி உள்ளதால் ஆரம்பத்தில் சற்றே போராக உணர்ந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் கடந்த வாரத்தில் இருந்தே சுவாரஸ்ய டாஸ்கள், அதற்கான விதிமுறைகள் என நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கி உள்ளது. தற்போதுள்ள 16 போட்டியாளர்களில் அபிஷேக்கை எதிர்த்து கமெண்ட் செய்பவர்களே அதிகம் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படுபவர் இவர் தான்.

இன்று இரவு கேட்கலாம்

இன்று இரவு கேட்கலாம்

இந்நிலையில் மூன்றாவது வார இறுதியில் கமல் வரும் அபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், நிறைய விதி மீறல் நடைபெற்றுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக இன்று தட்டி கேட்கலாம் என கமல் பேசினார். இதனால் இன்று தரமான சம்பவம் காத்திருக்கு என ரசிகர்கள் குஷி ஆகினர்.

விதிகள் அனைவருக்கும் தான்

விதிகள் அனைவருக்கும் தான்

இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில், பிரியங்காவை செய்யும் தவறுகளை நேருக்கு நேராக சொல்லி காய்ச்சி எடுத்துள்ளார் கமல். விதிகள் அக்ஷராவிற்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அக்ஷரா பேப்பரில் எழுதிக் காட்டினார் என விமர்சித்த நீங்கள், நிரூப் கையில் எழுதி காட்டியதை நாங்கள் அனைவரும் பார்த்தோம் என போட்டுடைத்தார்.

குஷியான ரசிகர்கள்

குஷியான ரசிகர்கள்

பிரியங்கா குரூப்பை கமல் கேள்வி கேட்க மாட்டாரா, குறும்படம் போட மாட்டாரா என ரசிகர்கள் பலர் கடந்த வாரம் முதலே ஆர்வமாக கேட்டு வருகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ அமைந்துள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யாரை காப்பாற்ற போகிறார்

யாரை காப்பாற்ற போகிறார்

இந்த ப்ரோமோக்களால் இந்த வார கமல் வரும் எபிசோட்கள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 9 பேரில் இருந்து யாரையெல்லாம் இன்று கமல் காப்பாற்ற போகிறார். இந்த வாரம் வெளியேற போகிற அந்த ஒருவர் யார் என எதிர்பார்ப்பு அதை விட அதிகரித்துள்ளது.

இன்று சேவ்வாகும் நபர்கள்

இன்று சேவ்வாகும் நபர்கள்

லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, இசைவாணி, தாமரை, அக்ஷரா, பாவ்னி ரெட்டி ஆகிய நான்கு பேரை கமல் இன்றைய எபிசோடில் காப்பாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவரை வெளியேற்றி விட்டு, நான்கு பேரை நாளை காப்பாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த நான்கு பேர் தவிர்த்து அபிஷேக், சின்ன பொண்ணு, அபினய், பிரியங்கா, ஐக்கி பெர்ரி ஆகிய ஐந்து பேர் தற்போது வரை டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X