ஒருவர் ஃபினாலே வெல்வார்... இருவர் எவிக்ட் ஆக வாய்ப்பு...வாக்குகள் சொல்லும் உண்மை இதுதான்

சென்னை : பிக்பாஸ் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது. வழக்கத்தை விட இந்த சீசனில் ஃபினாலே ரேஸில் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ளதால் இருவர், இருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எவிக்ஷனும் டபுள் டபுளாக நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டதை போல் இந்த வாரமும் மீதமுள்ள 8 பேரில் இருந்து இருவர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எத்தனை பேர் வெளியேற்றம்

எத்தனை பேர் வெளியேற்றம்

ஃபினாலே டாஸ்க்கின் முதல் நாளில் நிரூப் வெளியேற்றப்பட்டார். ஆனால் இரண்டாவது நாளில் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். நேற்று பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இன்று ஒருவர் போட்டியில் இருந்து வெளியேறுவாரா அல்லது இருவர் வெளியேற்றப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவர் இன்று வெளியேற்றம்

ஒருவர் இன்று வெளியேற்றம்

இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோக்களை பார்க்கும் போது ஒருவர் இன்று ஃபினாலே டிக்கெட் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். மற்ற இருவருக்கான டாஸ்க் நாளை நடத்தப்பட்டு, அவர்களில் வெற்றி பெறுபவருக்கு ஃபினாலே டிக்கெட் வழங்கப்படும்.

இவர் தான் வெளியேறுகிறாரா

இவர் தான் வெளியேறுகிறாரா

தற்போது ஃபினாலே டிக்கெட் போட்டியில் அமீர், சிபி, சஞ்சீவ் மூன்று பேரும் பங்கேற்று வருகிறார்கள். இன்று வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது அமீர் தான் இன்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட போகிறார் என தெரிகிறது. சிபி மற்றும் சஞ்சீவ் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என கூறப்படுகிறது.

இப்படி ஒரு சிக்கலா

இப்படி ஒரு சிக்கலா

இதில் மற்றொரு சிக்கல் என்னவென்றால், தற்போது ஃபினாலே டிக்கெட்டிற்காக போட்டி போடும் மூன்று பேருமே இந்த வாரம் குறைவான ஓட்டுக்கள் பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். அதனால் ஃபினாலே டிக்கெட் வெல்லும் அந்த ஒரு நபர் மட்டும் இறுதிப் போட்டிக்கு செல்வார். மற்ற இரண்டு பேரும் இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேற்றப்படலாம்.

போட்டியாளர்கள் ஓட்டு விபரம்

போட்டியாளர்கள் ஓட்டு விபரம்

லேட்டஸ்ட் தகவலின், ஆன்லைனில் நடத்தப்பட்ட ஓட்டளிப்பில் அதிகபட்சமாக 22.92 சதவீதம் ஓட்டுக்களுடன் ராஜு முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பிரியங்கா - 17.43 சதவீதம், தாமரை - 15.81 சதவீதம், நிரூப் - 13.45 சதவீதம், பாவனி - 11.87 சதவீதம், அமீர் - 8.23 சதவீதம், சிபி - 5.35 சதவீதம், சஞ்சீவ் - 4.95 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளனர்.

Recommended Video

#BiggBoss5 டைட்டிலை கைப்பற்ற எல்லோரும் நடிக்கிறாங்க… போட்டுடைத்த போட்டியாளர்கள்!
பிக்பாசிற்கே குழப்பம்

பிக்பாசிற்கே குழப்பம்

மக்கள் இவ்வாறு ஓட்டளித்துள்ளதால் யாருக்கு ஃபினாலே டிக்கெட்டை கொடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புவது, யாரை வெளியேற்றுவது என்ற குழப்பம் பிக்பாசிற்கே ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேற போகிற ஒருவர் யார் என்பது இன்று உறுதியாகி விடும். வெளியேற போகிற மற்றொரு நபர் மற்றும் முதல் இறுதிப் போட்டியாளர் யார் என்பதும் நாளை தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X