என் வாழ்க்கை பட ஹீரோ இவர் தான்...சுரேஷ் ரெய்னாவின் மாஸ் பதில்
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இதற்கு காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது தான். தோனியை 'தல' என கூப்பிடுவதை போல, சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' என்கின்றனர் ரசிகர்கள்.
தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்த கிரிக்கெட் வீரர்களும் தமிழில் பேசியும், தமிழ் பாடல்களுக்கு நடனமாடியும் கலக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி ரெய்னாவிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த மாஸ் பதிலின் வீடியோ வைரலாகி வருகிறது.

சூர்யா தான் சரியான சாய்ஸ்
உங்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டால் யார் ஹீரோவாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என ரெய்னாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சூர்யா தான் சரியான சாய்ஸ் என்றார்.

சூர்யாவை பிடிக்கும்
தொடர்ந்து சூர்யா பற்றி பேசிய ரெய்னா, எனக்கு சூர்யாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். தான் நடிக்கும் ரோல்களுக்காக அவர் நிறைய உழைக்கிறார். அது மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.

சுயசரிதை எழுதிய ரெய்னா
ரெய்னா சமீபத்தில் தான் தனது சுயசரிதையின் தலைப்பை வெளியிட்டார். அந்த புத்தகத்திற்கு, Believe: What Life and Cricket Taught Me என பெயரிட்டுள்ளார்.

கண்டனம் தெரிவித்த சூர்யா
சில நாட்களுக்கு முன் பஞ்சாப்பில் ரெய்னாவின் குடும்பத்தினர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தவர். ரெய்னாவின் உறவினர் ஒருவர் உயிரிழந்தார். சிலர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு சூர்யா கண்டனம் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











