Don't Miss!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Sports
கண் அசைவிற்காக காத்திருக்கும் 3 பேர்.. "தமிழர்களை" புறக்கணிக்கும் தோனி.. நேற்று நடந்த பரபர சம்பவம்
- Automobiles
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Finance
சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முழு படமும் ஒரே இடத்தில் உருவாக்கபட்டது... ஹாலிவுட்டை ஓவர் டேக் செய்த கோலிவுட்!
சென்னை: பேய் பசி என்ற தமிழ்ப்படத்தின் மொத்த சூட்டிங்கும் ஒரே கடைக்குள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு முயற்சி நடப்பது கோலிவுட்டில் இதுவே முதல்முறையாகும்.
ஹாலிவுட்டில் 'தி ரூம்' 'தி மிஸ்ட்' போன்ற சில பிரபலமான படங்கள் ஒரே அறையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சிறப்பம்சத்திற்காக அந்த படங்கள் நிறைய விருதுகளை வாங்கி இருக்கிறது. அந்த விதத்தில் தமிழில் அதேபோல் ஒரு படம் தற்போது வர இருக்கிறது.

பேய் பசி என்ற இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கல்யாண் இது குறித்து பேசும் போது ''இது ஒரே கடைக்குள் நடக்கும் கதை ஆகும். இதில் பேய் நேரடியாக காட்டப்படாது. ஆனால் கண்டிப்பாக பயப்படும் அளவுக்கு இருக்கும். இது ரொமாண்டிக் கலந்த பேய் படமாக இருக்கும். படத்தில் பெரிய டிவிஸ்ட் ஒன்று இருக்கிறது'' என்றார்.
மேலும் படப்பிடிப்பு குறித்து கூறும் போது ''ஒரே இடத்தில் படம் எடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் ஜாலியாக வேலை பார்த்தோம்'' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் கருணாகரன், நமிதா, யூ- டியூப் புகழ் ஹரி பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.