Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது அசிஸ்டெண்ட் ஆகணும்னா குடிக்கவைப்பாரா?..என்னங்க சொல்றாரு மிஷ்கின்
சென்னை: என்னிடம் உதவி இயக்குனர்களாக வருபவர்களை முதலில் குடிக்க வைப்பேன் என்று பொதுமேடையில் இயக்குனர் மிஷ்கின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது என பேசினார்.
ரூ100 கோடி பட்ஜெட், 50 கார்களை உடைப்பது, நான்கைந்து ஃபைட் சீன் இப்ப நல்ல படத்துக்கான ஃபார்முலா ஆகிவிட்டது என மிஷ்கின் குற்றம் சாட்டினார்.
நான்
சினிமாவை
திருமணம்
செய்து
கொண்டேன்...
மனைவி
பெரிதாக
தெரியவில்லை..
இயக்குனர்
மிஷ்கின்

அதிர்ச்சி ஏற்படுத்திய டைரக்டர் மிஷ்கின்
நடிகர் அதர்வா நடித்து மிஷ்கினின் உதவி இயக்குனராக இருந்து ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள குருதியாட்டம் பட வெளியீட்டு விழா நேற்று நடந்தது இந்த விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் பரபரப்பாக பல கருத்துக்களை பேசினார். மிஸ்கின் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது அவரது படங்களில் பல்வேறு காட்சிகளை பரபரப்பாக அமைப்பது போல் மேடையிலும் அவர் பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

படம் நன்றாக எடுக்கணும், நன்றாக ஓடணும்னு எடுக்க கூடாது
தனது உதவி இயக்குனர் தற்போது இயக்குநராகி இருப்பது பற்றி மிஸ்கின் பேசிய பொழுது அவனுக்கு நான் தந்தை, எனக்கு பேரன் போன்றவர் என்று பேசி அவர்கள் குடும்பத்தை பற்றி பேசினார். அப்போது இயக்குனர் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. "என்னுடைய உதவி இயக்குனர்கள் படம் நன்றாக எடுக்க வேண்டும் என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் படம் ஓடுவது பற்றி யோசிக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள்தான் என்னிடம் உதவி இயக்குனராக இருக்க முடியும்.

என் உதவி இயக்குநர்களை முதலில் மது அருந்த சொல்வேன்
உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் என்னை எதிர்த்துப் பேசுவது எனக்கு பிடிக்கும். என்னிடம் உதவி இயக்குநர்களாக வருபவர்களை முதலில் அவர்களை மது அருந்த வைப்பேன் மது அருந்தி விட்டு தாறுமாறாக உளறு, என்னை திட்டு, என்னுடன் சண்டைப்போடு என்று சொல்வேன் என்று பேசினார். பத்திரிக்கையாளர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஏனென்றால் நல்லப்படத்தை எப்போதும் பாராட்டுவார்கள். அந்தப்படம் ஓடணும் என்று அவசியமில்லை.

நான்கைந்து ஃபைட் சீன், 50 கார்களை உடைப்பதுதான் படமா?
ஒரு படம் என்றால் நான்கைந்து ஃபைட் சீன் இருக்கணும், 100 கோடி ரூபாய் பட்ஜெட் இருக்கணும், 50 கார்களை உடைக்கணும் இது இப்ப ஃபார்முலாவா ஆகிவிட்டது. சில நான்கைந்து பேர்கள் மட்டுமே நல்ல படம் எடுக்க இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் வெளிப்படையாக விமர்சனம் செய்தது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. நீங்கள் நன்றாக படம் எடுத்தால் மட்டும் போதும், படம் ஓடணும் என்ற குறிக்கோளுடன் எடுக்காதீர்கள். வலிகளை எப்படி தாங்கிக்கொள்வது என்பதை மெசேஜாக சொல்வதுதான் கதை. நல்ல படமாக மட்டும் எடுங்க என்று பேசினார்.