»   »  தனுஷ் யார் மகன் வழக்கு: பள்ளி அசல் சான்றிதழ்களை கேட்கும் கோர்ட்

தனுஷ் யார் மகன் வழக்கு: பள்ளி அசல் சான்றிதழ்களை கேட்கும் கோர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுரை: தனுஷின் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் அசலை சமர்பிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக மரபணு சோதனைக்கும் தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்

தனுஷ்

கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

பதில் மனு

பதில் மனு

தனுஷ் தங்கள் மகன் தான். அதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்றும், சும்மா தனுஷை சொந்தம் கொண்டாடவில்லை என்றும் அந்த தம்பதி பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சான்றிதழ்கள்

சான்றிதழ்கள்

வழக்கு விசாரணையின்போது தனுஷ் படித்த பள்ளி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

அசல்

அசல்

தனுஷ் படித்த பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் நகல் வேண்டாம் அசலை சமர்ப்பியுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


English summary
Madurai high court has ordered Dhanush and Thiruppuvanam couple to submit the originals of the actor's school certificates and documents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil