»   »  தனுஷ் என் மகன் இல்லையா?: கஸ்தூரி ராஜா விளக்கம்

தனுஷ் என் மகன் இல்லையா?: கஸ்தூரி ராஜா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தனது மகன் என்று பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும் என இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் கலையரசன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்தனர். இதை தனுஷும், அவரது தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் மறுத்தனர்.

இந்நிலையில் அந்த தம்பதி தனுஷ் தங்களின் மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில்,

வருத்தம்

வருத்தம்

தனுஷ் என் மகன் அல்ல என வழக்கு தொடரப்பட்டுள்ள செய்தியை அறிந்து வருத்தமாக உள்ளது. இது பதில் சொல்லும் அளவுக்கு தகுதியான விஷயம் கிடையாது.

நண்பர்கள்

நண்பர்கள்

என்னை என் நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக நன்றாக தெரியும். என் மகன் தனுஷை சிறு வயதில் இருந்தே அனைவருக்கும் தெரியும்.

நீதித் துறை

நீதித் துறை

நீதித்துறையின் பொன்னான நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என்று வருத்தமாக உள்ளது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பல பிரச்சனைகளை நீதிமன்றம் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.

வீண்

வீண்

முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைக்க விடாமல் நீதிமன்றத்தின் நேரம் இது போன்ற பொய் வழக்குகளால் வீணடிக்கப்படுகிறதே என நினைத்தாலே கவலையாக உள்ளது. நீதித்துறையை மதிப்பதால் வேறு எதுவும் கூற விரும்பவில்லை.

English summary
Director Kasthuri Raja said that actor Dhanush is definitely his son and anybody else'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil