»   »  நான் யார் மகன்?: போட்டோ வெளியிட்டு சூசகமாக நிரூபித்த தனுஷ்

நான் யார் மகன்?: போட்டோ வெளியிட்டு சூசகமாக நிரூபித்த தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தான் யார் மகன் என்பதை ஃபேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்டு சூசமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என திரையுலகினருக்கு நன்கு தெரியும். இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன் என திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரந்துள்ளனர். இந்த வழக்கில் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் யார் மகன் என்ற கேள்வியை பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது சிறு வயதில் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம்

ஆதாரம்

சில புகைப்படங்கள் தங்கமானவை. இந்த புகைப்படத்தை என் தந்தையின் நண்பரிடம் இருந்து இன்று வாங்கினேன். எமோஷனலான தருணம் எனக்கு என புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

மகன்

மகன்

தங்கள் மகன் 16 வயதில் காணாமல் போனதாக கதிரேசன், மீனாட்சி தம்பதி தெரிவித்துள்ள நிலையில் தனுஷ் பொடியனாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் யார் மகன் என்பதை சூசமாக தெரிவித்துள்ளார்.

விசு

விசு

முன்னதாக தனுஷ் சிறுவனாக தனது குடும்பத்தார் மற்றும் நடிகர் விசுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது குறித்து விசுவிடம் கேட்டதற்கு, தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகனே என திட்டவட்டமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanush has posted a childhood photo of him on facebook at a time when an elderly couple from Thirupuvanam claiming him to be their son.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil