Don't Miss!
- Technology
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- News
பாஜக கூட்டணிக்கு அதிமுக இபிஎஸ் அணி குட்பை? அண்ணாமலை சந்திப்பு வேஸ்ட்? வெளுத்து கட்டிய பொன்னையன்!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Finance
3 அதானி குழும பங்குகள் மீது கூடுதல் கண்காணிப்பு.. NSE அறிவிப்பு..!
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அரண்மனை 3ல் எதற்காக 3 ஹீரோயின்கள்... பிரஸ்மீட்டில் அசரவைக்கும் விளக்கம் கொடுத்த சுந்தர் சி!
சென்னை : இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது கலகலப்பான ஹாரர் திரைப்படமாக அரண்மனை3 உருவாகி உள்ளது.
Recommended Video
இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடித்து இருக்க கதாநாயகிகளாக ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் மற்றும் ஆண்ட்ரியா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
நல்லவங்க
வேஷம்
போடாம
இருந்தீங்கனா
நல்லாருக்கும்..
இந்த
வார
நாமினேஷன்
ப்ராசஸ்..
செம
ப்ரோமோ
!
சமீபத்தில் அரண்மனை 3 பிரஸ்மீட் நடைபெற்றது அதில் இந்தப்படத்தில் எதற்காக மூன்று கதாநாயகிகள் எனக் கேட்டதற்கு அதற்கு அசரவைக்கும் பதிலை சுந்தர் சி அளித்துள்ளார்.

பேய் படங்களையும் இயக்க தெரியும்
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி வந்த சுந்தர் சி முதல் முறையாக அரண்மனையை இயக்கி பேய் படங்களையும் இயக்க தெரியும் என நிரூபித்துக் காட்டி இருந்தார்.

அரண்மனை 3வது பாகம்
அரண்மனை 1 வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் வெளியானது அரண்மனை 2ம் பாகம் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் 3வது பாகமும் வரும் என சுந்தர் சி அப்போதே அறிவித்திருந்தார். இந்த நிலையில் சுந்தர் சி கூறியபடியே அரண்மனை 3வது பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. அரண்மனை 3ல் ஆர்யா ஹீரோவாக நடித்திருக்க கதாநாயகிகளாக மூன்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.

அக்டோபர் 14
ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். பொதுவாகவே சுந்தர் சியின் திரைப்படங்கள் என்றால் கதாநாயகிகள் அதிக அளவில் இருப்பார்கள் அதே ஃபார்முலாவில் இப்பொழுது அரண்மனை மூன்றிலும் மூன்று கதாநாயகிகள் உள்ளனர். அக்டோபர் 14-ஆம் தேதி அரண்மனை3 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ள சூழலில் இப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மூன்று கதாநாயகிகள் ஏன்
பிரஸ்மீட்டில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து வந்த சுந்தர் சியிடம் இந்த படத்தில் எதற்காக மூன்று கதாநாயகிகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி அரண்மனை ஒன்றாவது பாகத்திலும் மூன்று கதாநாயகிகள் அதேபோல அரண்மனை இரண்டாவது பாகத்திலும் மூன்று கதாநாயகிகள் எனவே அரண்மனை மூன்றாவது பாகத்திலும் மூன்று கதாநாயகிகள் கதைக்கு தேவைப்பட்டதால் வைத்துள்ளேன்.

பிரஸ்மீட்டில் சுந்தர் சி பதில்
ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூவரும் மிகச் சிறப்பாக இப்படத்தில் நடித்துள்ளார்கள். சில தமிழ் தெரியாத நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்கும்போது எந்த ஒரு உணர்வும் இன்றி வாயசைத்துவிட்டு மட்டும் போவார்கள் அப்படி இருக்கும் நடிகைகள் சினிமாவில் நிலைக்க மாட்டார்கள் ஆனால் ராஷி கண்ணா தமிழை நன்றாக கற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இவரின் கடின உழைப்பிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகியாக வலம் வருவார் என ராஷி கண்ணாவை புகழ்ந்து பிரஸ்மீட்டில் பேசியுள்ளார்.