»   »  தயவு செய்து என்னை அண்ணா என அழைக்காத தாயி: அசினை கேட்டுக் கொண்ட அபிஷேக் பச்சன்

தயவு செய்து என்னை அண்ணா என அழைக்காத தாயி: அசினை கேட்டுக் கொண்ட அபிஷேக் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை அண்ணன் என அழைக்க வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அசினிடம் தெரிவித்துள்ளார்.

நடிகை அசின் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். அவருக்கு வயதாகிவிட்டது, திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டில் இருந்து வெளியேறுவது நல்ல முடிவு என இந்தி நடிகர் கமால் ஆர் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அசின் நடித்துள்ள ஆல் இஸ் வெல் படம் ரிலீஸாக உள்ளது.

போல் பச்சன்

போல் பச்சன்

அசின் போல் பச்சன் படத்தில் அபிஷேக் பச்சனின் சகோதரியாக நடித்தார். அதனால் அவர் அபிஷேக்கை பாய்ஜான் அதாவது அண்ணன் என்று அழைத்து வந்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கூட அவரை அண்ணன் என்றே அழைத்துள்ளார்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

ஆல் இஸ் வெல் படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடித்துள்ளார் அசின். இந்நிலையில் படப்பிடிப்பின்போது வழக்கம்போல அவரை அண்ணா, அண்ணா என்று அழைத்துள்ளார் அசின்.

படக்குழுவினர்

படக்குழுவினர்

ஜோடியாக நடித்துக் கொண்டு அவரை அண்ணன் என்று அழைத்துக் கொண்டிருக்கிறாரே இந்த அசின் என படக்குழுவினர் வித்தியாசமாக பார்த்தார்களாம். இதை அபிஷேக் புரிந்து கொண்டு தன்னை அண்ணா என்று அழைக்க வேண்டாம் என்று அசினிடம் தெரிவித்துள்ளார்.

அண்ணா

அண்ணா

அசின் கூறுகையில், அபிஷேக் என்னிடம் வந்து இந்த படத்தில் நடிக்கையில் என்னை அண்ணா என்று அழைக்காதீர்கள் என்றார். அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை புரிந்து கொண்டேன். அதில் இருந்து அவரை நான் ஏ.பி. என்றே அழைத்து வருகிறேன் என்றார் அசின்.

English summary
Abhishek Bachchan has asked Asin not to call him as Bhaijaan while acting in the movie All is well.
Please Wait while comments are loading...